வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 மார்ச், 2010

ஜானக பெரேரா படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்கள் விடுதலை

அனுராதபுரத்தில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் பலியான மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இக்குண்டுத் தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜானக பெரோ உள்ளிட்ட 36 பேர் உயிரிழந்தனர்.
இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருட காலமாக சிறையில் வைக்கப்பட்டிருந்த எட்டு பேரை, அனுராதபுர நீதவான் தர்ஷிக்கா விமலசிறி விடுதலை செய்துள்ளார்.
போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தினால் சட்டமா அதிபரின் பரிந்துரையின் அடி;பபடையில் குறித்த எட்டு சந்தேக நபர்களையும் விடுதலை செய்வதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்னூர் ஆப்தீன் முசாபீர், அபுசாலி ஜபீல், நாவூர்கனி ஜெமீன், சுல்லான் அப்துல் அலி, மொஹமட் ஆனியா, ஆர்.தபோரூபன், எம்.சிவதாசன் மற்றும் அப்துல் கூத்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
உமார் அபிதாப் மற்றும் சுதகரன் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’