வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அம்பாறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்பாறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 ஜனவரி, 2013

மனைவியை மதமாற்றம் செய்த மதகுருவை கொலை செய்தருக்கு மரண தண்டனை


தனது மனைவியை மதமாற்றம் செய்தார் எனக் கோபமுற்று மதகுரு ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த நபருக்கு அம்பாறை நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது.

புதன், 19 டிசம்பர், 2012

சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் 10 ஆயிரம் பேர் பாதிப்பு


அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக பல தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல பாதைகளினூடான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

திங்கள், 1 அக்டோபர், 2012

கடவுச்சீட்டு மோசடிக் குற்றச்சாட்டில் பெண் கைது



தனது கடவுச்சீட்டில் வயதைக் குறைத்தும் பெயரை மாற்றியும் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரை நாளை செவ்வாய்க்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.றிஸ்வி உத்தரவிட்டார்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

அதிரடிப்படை இன்ஸ்பெக்டரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏ.எஸ்.பி. பலி

அம்பாறையில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் (ஏ.எஸ்.பி.) அதிரடிப்படை பிரதம இன்ஸ்பெக்டர் ஒருவரினால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 அம்பாறை மஹா ஓயாவிலுள்ள 69 ஆம் அதிரடிப்படை நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

மர்ம மனிதன்: பீதியில் உறையும் கிராமங்கள்!


அச்சத்தின் உச்சத்தில் உறைந்து போய்க் கிடக்கின்றன அந்தக் கிராமங்கள்! பகல் வேளைகளில் மட்டுமே அதிகமான மக்கள் வெளியே வருகின்றார்கள். மாலையானதும் வீட்டுக்குள் அடங்கிப் போகின்றார்கள்.

வியாழன், 17 மார்ச், 2011

அம்பாறை தமிழர் மகா சபை தலைவர் மீது மாகாண சபை உறுப்பினர் தாக்குதல்

அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் தலைவர் எஸ். கல்யாணசுந்தரம் மீது இன்று முற்பகல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திங்கள், 17 ஜனவரி, 2011

அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் ஆணைக்குழுவின் அமர்வுகள் ஒத்திவைப்பு

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட அமர்வுகள் சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதன், 5 ஜனவரி, 2011

17 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 84 வயது நபர் விளக்கமறியலில்

அ ம்பாறை மாவட்டத்தின் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசத்தில் 17 வயது சிறுவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 84 வயதான நபரொருவரை அம்பாறை பொலிஸார் கைது செய்து நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர் படுத்தினர்

வியாழன், 2 செப்டம்பர், 2010

கல்முனை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட கைதிகள் இருவர் தப்பியோட்டம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சிறைக்கூட சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் அக்கரைப்பற்று நீதிமன்றுஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை சிறைக்கூட சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் இரு கைதிகள் தப்பிச்சென்றுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வியாழன், 22 ஜூலை, 2010

கள்ளநோட்டு அச்சிட்ட குழு சந்தேகத்தில் கைது

கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகித்து வந்த இளைஞர் குழுவொன்றை கொக்கொட்டிச்சோலை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

புதன், 21 ஜூலை, 2010

ஆயுதக்குழு ஒன்று அம்பாறையில் கிராமவாசிகள்மீது தாக்குதல்

நேற்று முன்தினமிரவு இனந்தெரியாத ஆயுதக்குழு ஒன்று அம்பாறை மாவட்டத்தின் கிராமவாசிகள் சிலரைத் தாக்கியதை அடுத்து அக்கிராமவாசிகள் தங்கள் கிராமங்களைவிட்டு வெளியேறி உள்ளார்கள்.

வெள்ளி, 16 ஜூலை, 2010

"அம்பாறை உதவி ஆசிரியர் நியமனத்தில் தமிழர், முஸ்லிம்கள் புறக்கணிப்பு"

மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் அம்பாறை மாவட்டதில் உள்ள தொண்டர் ஆசிரியர்களில் 179 பேரை உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக 79 சிங்கள தொண்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை என அம்பாறை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம். சப்றாஸ் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

வியாழன், 8 ஜூலை, 2010

பாடசாலையிலிருந்து விலகப்போவதாக 400 மாணவர்கள் எச்சரிக்கை

அம்பாறையிலுள்ள பாடசாலையொன்றில் அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சுமார் 400 மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை கைவிடப்போதாக எச்சரித்துள்ளனர்.

புதன், 30 ஜூன், 2010

உர விற்பனை மோசடி : சம்மாந்துறையில் நால்வர் கைது

அம்பாறை மாவட்ட சம்மாந்துறைப் பகுதியில் மகிந்த சிந்தனை திட்டத்தினூடாக வழங்கப்பட்ட உரமூடைகளை மோசடி செய்து பதுக்கி வைத்திருந்த நால்வரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வியாழன், 17 ஜூன், 2010

கஞ்சா கலந்த லேகியம் வைத்திருந்தவருக்கு அபராதம்

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடி வேம்பு பிரதேசத்தில் அபாயகரமான போதைவஸ்துகளில் ஒன்றான கஞ்சா கலந்த லேகியம் வைத்திருந்த ஒருவரை அக்கரைப்பற்று பொலிசார் கைதுசெய்துள்ளனர்

புதன், 12 மே, 2010

காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகாமையிலிருந்து சடலம் மீட்பு!


அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகாமையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டதாக சம்மாந்துறைப் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 10 மே, 2010

அம்பாறை பாடசாலை மாணவ, மாணவிகளின் ஆபாச இறுவெட்டு!


அம்பாறையில் அப்பிரதேச மாணவர்களினால் எடுக்கப்பட்ட ஆபாச இறுவெட்டுக்கள் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இவ்வாறான இறுவெட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியதோடு இரு மாணவர்களையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

திங்கள், 12 ஏப்ரல், 2010

அம்பாறை பிரதிநிதித்துவம்.. ஃபேரியல் அஷ்ரப், இனியபாரதி, சந்திரநேரு சந்திரகாந்தன், டாக்டர் தோமஸ் வில்லியம் தோல்வி!!


இலங்கையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டம் என கருதப்படும் அம்பாறை மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும் போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அங்கு இம்முறை 4 இலிருந்து 3 ஆகக் குறைந்துள்ளது. இதேவேளை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 இலிருந்து 3 ஆக உயர்ந்துள்ளது.

புதன், 24 மார்ச், 2010

அம்பாறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Loogix.com. Animated avatars. அம்பாறை பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்சிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அம்பாறை வீரகொட பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடிக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் முச்சக்கர வண்டியொன்றின் சாரதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சனி, 6 மார்ச், 2010

உங்கள் வாக்கு சிங்களவருக்கே

கட்சி நிறம் எதுவானாலும் உங்கள் வாக்கு சிங்களவருக்கே என்ற வாசகத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. சிங்களப் பகுதிகளில் மட்டுமன்றி தமிழ் முஸ்லிம் பகுதிகளிலும் இந்த வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அம்பாறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் பேசும் மக்களின் பிரதேசமாக இருந்த அம்பாறை பெருமெடுப்பில நடத்தப்பட்ட குடியேற்றங்களின் மூலம் சிங்கள மயமாக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கடந்த தேர்தலில் அதிகளவான முஸ்லிம் பிரதிநிதிகளும் ஒரு தமிழ் பிரதிநிதியும் வெற்றி பெற்ற நிலையில் இனவாதத்தை கக்கும் இந்தப் பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹிஸ்புல்லாவைத் தாம் ஆதரிப்பதாகவும் தமிழ் மக்கள் ஹிஸ்புல்லாவிற்கு வாக்களிக்கும்படியும் மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரன் பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.