வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 2 செப்டம்பர், 2010

கல்முனை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட கைதிகள் இருவர் தப்பியோட்டம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சிறைக்கூட சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் அக்கரைப்பற்று நீதிமன்றுஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை சிறைக்கூட சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் இரு கைதிகள் தப்பிச்சென்றுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
.நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் அக்கரைப்பற்று நீதிமன்றில் இருந்து கல்முனை பிரதான வீதியூடாக தனியார் பஸ் ஒன்றில் நான்கு கைதிகள் அழைத்துவரப்பட்டிருந்தபோது அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள பாலமுனை பள்ளி வாயிலுக்கு அருகில் வைத்து இருகைதிகள் விளங்கினை கழட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பல பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இவர்கள் கொழும்பில் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இருவரும் வழக்குக்காக கல்முனை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கிருந்த சிறைக்காவலாளிகளனால் இன்று அக்கரைப்பற்று நீதிமன்று வழக்குக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வழக்கு முடிந்து தனியார் பஸ்ஸில் வந்து கொண்டிருந்தபோது காவலர்கள் அயர்ந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட இரு சந்தேக நபர்களும் தப்பிச்சென்றதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டாளைச்சேனை பகுதியை சொந்த இடமாக கொண்ட ஆதம்பாவா ஜசீர், இமால்தீன் அன்வர் என்ற இரு சந்தேக நபர்களே தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் குறித்த பகுதியை சுற்றிவளைத்த அக்கரைப்பற்று பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருதாக தெரிவித்தனர்க்கு அழைத்துச்செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் இரு கைதிகள் தப்பிச்சென்றுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
.நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் அக்கரைப்பற்று நீதிமன்றில் இருந்து கல்முனை பிரதான வீதியூடாக தனியார் பஸ் ஒன்றில் நான்கு கைதிகள் அழைத்துவரப்பட்டிருந்தபோது அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள பாலமுனை பள்ளி வாயிலுக்கு அருகில் வைத்து இருகைதிகள் விளங்கினை கழட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பல பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இவர்கள் கொழும்பில் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இருவரும் வழக்குக்காக கல்முனை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கிருந்த சிறைக்காவலாளிகளனால் இன்று அக்கரைப்பற்று நீதிமன்று வழக்குக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வழக்கு முடிந்து தனியார் பஸ்ஸில் வந்து கொண்டிருந்தபோது காவலர்கள் அயர்ந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட இரு சந்தேக நபர்களும் தப்பிச்சென்றதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டாளைச்சேனை பகுதியை சொந்த இடமாக கொண்ட ஆதம்பாவா ஜசீர், இமால்தீன் அன்வர் என்ற இரு சந்தேக நபர்களே தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் குறித்த பகுதியை சுற்றிவளைத்த அக்கரைப்பற்று பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருதாக தெரிவித்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’