கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகித்து வந்த இளைஞர் குழுவொன்றை கொக்கொட்டிச்சோலை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 1000ரூபா கள்ள நோட்டுக்கள், மோட்டார் சைக்கிள்கள், கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பெருமளவிலான பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மீட்கப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர்கள் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தாந்தாமலை ஆலய உற்சவத்தின்போது கள்ளநோட்டுக்களை மாற்றிக் கொண்டிருந்த போதே இவர்கள் பொலிசாரிடம் சிக்கினர். அம்பாறையைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் உகண பகுதியில் வைத்துக் கள்ள நோட்டுக்களை இவர்கள் அச்சிட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’