வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 22 ஜூலை, 2010

கிளிநொச்சி இராமநாதன் பண்ணை மக்களை வெளியேற்ற சிலர் முயற்சி

கிளிநொச்சி மருதநகர் இராமநாதன் பண்ணையில் வசித்து வருகின்ற மக்களை அங்கிருந்து வெளியேற்ற சிலர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிய வருகிறது.

இந்நிலையில் தாம் நீண்டகாலம் வாழ்ந்து வருகின்ற நிலங்களில் தொடர்ந்தும் வாழ வழி செய்யுமாறு மக்கள் கேட்டுள்ளனர்.சேர்.பொன் இராமநாதனுக்குச் சொந்தமான 330 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் 10 ஏக்கர் மேட்டு நிலங்களில் 50 வருடங்களுக்கு முன்னர் வாழலாம். ஆனால், அவற்றை உரிமை கோர முடியாது என்ற அடிப்படையில் மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.
இதனடிப்படையில் மக்கள் இன்று வரை அங்கு வாழ்ந்து வருகின்றனர். தற்போது இப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றச் சிலர் இரகசியமாக முயற்சித்து வருகின்றனர்.இதனால் தாம் நீண்டகாலம் வாழ்ந்துவருகின்ற காணிகளைக் கருணை அடிப்படையில் தமக்கே வழங்குமாறும் மக்கள் கேட்டுள்ளனர்.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரனிடம் அவர்கள் நேரடியாகத் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் தற்போது சேர்.பொன் இராமநாதனின் பரம்பரையினரிடம் இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதனிடமும் இது குறித்துப் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’