அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக பல தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல பாதைகளினூடான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள 20 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் எதுவித போக்குவரத்து வசதிகளுமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (17) மாலை முதல் இம்மக்களின் பிரதான போக்குவரத்து பாதையிலுள்ள கிட்டங்கி தாம்போதியின் மேலாக 4 அடிக்கு மேல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இன்று (18) காலை முதல் தொடர்ந்தும் மழை பெய்து வருவதுடன் வானம் இருள்சூழ்ந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இதேவேளை, இப்பிரதேசத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக சொறிக்கல்முனை பிரதேசத்தில் 17 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், பகுதியளவில் சேதத்திற்குள்ளாகியுள்ளதாகவும், பல பாரிய மரங்கள் வீதிகளுக்கு குறுக்கே முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’