இ லங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாஸ ராஜபக்ஷவின் வீட்டுக்கு அருகில் இன்று வியாழக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் அவரது சாரதி இரண்டு வெற்றுத் தோட்டாக்களை மீட்டுள்ளதாகவும் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
நாவலையிலுள்ள அவரது வீட்டுக்கு அருகிலேயே இவ்வாறானதொரு சத்தம் கேட்டுள்ளதாகவும் அங்கேயே துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறானதொரு முறைப்பாடு தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் அங்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லையென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு அருகிலுள்ள வீடுகளில் பட்டாசு கொழுத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனது வீட்டுக்கு அருகில் இரண்டு வெற்றுத் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக சட்டத்தரணி விஜயதாஸ பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து மிரிஹான பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
நாவலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவின் வீட்டில் தற்போது பொலிஸார் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துவருகின்றனர்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’