வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 20 டிசம்பர், 2012

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு


நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளதுடன், 15 பேர் காணாமல் போயுள்ளனர். சீரற்ற காலநிலையால் 68,904 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை நின்றுள்ளபோதிலும், பல பகுதிகள் இன்னமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சிலாபம், பங்கதெனிய, மஹவெவ, மட்டக்களப்பு, அம்பலாந்தோட்டை ஆகிய நகரங்கள் நீரில் மூழ்கியிருந்தன. நாடளாவிய ரீதியிலுள்ள 72 பாரிய குளங்களில் 31 குளங்களில் நீர் வான்மட்டத்தை எட்டியுள்ளன. அநுராதபுரத்தில் 10 பாரிய குளங்களின் வான்கதவுகளும் 41 நடுத்தரக் குளங்களின் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டையில் 11 குளங்களின் வான்கதவுகளும் குருநாகலையில் தெதுருஓயா உட்பட 5 குளங்களின் வான்கதவுகளும் மொனராகலையில் 3 குளங்களின் வான்கதவுகளும் புத்தளத்தில் 3 குளங்களின் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. பராக்கிரம சமுத்திரத்தில் 8 வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. 358 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 1907 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5231 குடும்பங்கள் 102 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் சரத் லால் குமார தெரிவித்துள்ளார். இதேவேளை, மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’