அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் கலை, இலக்கியத்துறைகளில் சாதித்த கலைஞர்கள் ஆண்டுதோறும் கௌரவிக்கப்பட்டுவரும் நிலையில் இவ்வாண்டும் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கல்வி, கலை இலக்கியத்திற்கு அமைச்சர் அவர்கள் எமக்கு பூரண ஆதரவு வழங்கி வருவதோடு, வழிகாட்டியாகவும் இருந்து வருகின்றார். எமது மக்கள் பல்வேறு துன்பதுயரங்களை அனுபவித்த வேளைகளிலெல்லாம் மக்களோடிருந்து தொடர்ச்சியாக அம்மக்களது துயர்துடைத்து வருகின்றவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என்றும் புகழாரம் சூட்டினார்.
நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி உரையாற்றும் போது வடமாகாணத்திலுள்ள கலை இலக்கியவாதிகளை ஊக்குவிக்கும் முகமாகவும், மேலும் வளர்த்தெடுக்கும் முகமாகவும் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதனூடாகவே இம்மாகாணத்தைச் சேர்ந்த கலைஞர்களும் இன்றையதினம் கௌரவிக்கப்படுகின்றனர்.
அந்தவகையில், வடமாகாணத்தில் சிறந்த கலைஞர்களைத் தெரிவு செய்வதற்காக குழுவொன்றின் மூலமாக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் மகிந்த சிந்தனையின் பிரகாரம் இவ்வாறான கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் அவர்களை வளர்த்தெடுப்பதிலும் அமைச்சர் அவர்கள் இணைந்து பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளார் என்றும், எதிர்காலங்களிலும் இவ்வாறான கலைஞர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
இன்றைய இரண்டாம் நாள் மாலை அமர்வில் பிரதம விருந்தினர் உள்ளிட்ட அதிதிகள் மங்கள வாத்தியம் சகிதம் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தலைமையுரை, சிறப்புரையினை தொடர்ந்து கலைத்துறைக்காக பல்வேறு வகையிலும் பங்களிப்புச் செய்த கலைஞர்களுக்கு இன்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி சகிதம் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து விருது வழங்கிக் கௌரவித்தனர்.
தொடர்ந்து இலக்கியத்துறைக்காக பல்வேறு வழிகளிலும் பங்காற்றியவர்களும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வடமாகாண கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் கலைஞர் கௌரவிப்பு விழா கடந்த 2010 ம் ஆண்டு கிளிநொச்சியிலும் 2011 ம் ஆண்டு மன்னாரிலும், இவ்வாண்டு யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
கௌரவிக்கப்பட்ட கலை, இலக்கியவாதிகளுக்கு அமைச்சர் அவர்கள் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
-->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’