கட்சி நிறம் எதுவானாலும் உங்கள் வாக்கு சிங்களவருக்கே என்ற வாசகத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. சிங்களப் பகுதிகளில் மட்டுமன்றி தமிழ் முஸ்லிம் பகுதிகளிலும் இந்த வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அம்பாறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் பேசும் மக்களின் பிரதேசமாக இருந்த அம்பாறை பெருமெடுப்பில நடத்தப்பட்ட குடியேற்றங்களின் மூலம் சிங்கள மயமாக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கடந்த தேர்தலில் அதிகளவான முஸ்லிம் பிரதிநிதிகளும் ஒரு தமிழ் பிரதிநிதியும் வெற்றி பெற்ற நிலையில் இனவாதத்தை கக்கும் இந்தப் பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹிஸ்புல்லாவைத் தாம் ஆதரிப்பதாகவும் தமிழ் மக்கள் ஹிஸ்புல்லாவிற்கு வாக்களிக்கும்படியும் மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரன் பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’