வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 6 மார்ச், 2010

நித்யானந்த சாமியார் ஒரு மோசடிபேர்வழி. புலம்பியுள்ளார் நடிகை தாரா.


நித்யானந்த சாமியார் ஒரு மோசடி ப் பேர்வழி. அவரை நம்பி ஏமாந்த லட்சக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி என்று புலம்பியுள்ளார் நடிகை தாரா.

கன்னடத்தில் முன்னணி நடிகை கம் அரசியல்வாதி இந்த தாரா. தமிழில் இங்கேயும் ஒரு கங்கை, நாயகன் என சில படங்களில் நடித்தவர்.

நித்யானந்தரின் மிகத் தீவிரமான பக்தை இந்த தாரா. நித்யானந்தமே பக்தர்களுக்கு 'நித்திய ஆனந்தம்' என்றும், கடவுள் அவதாரம் என்றெல்லாம் வெளிப்படையாக ஆதரவு அளித்தவர் தாரா. நித்யானந்தத்துக்காக பல ரியல் எஸ்டேட் டீல்களில் இவர் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. கன்னடத் திரையுலகில் நித்யானந்தன் புகழ் பரப்புவதில் முன்னணியில் இருந்தார்.

தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாமல் நித்யானந்தனின் பெங்களூர் பிடாதி ஆசிரமத்துக்குப் போய் நாள் முழுக்க அங்கே சேவைகள் செய்வது தாராவின் வழக்கம்.

இந்த நிலையில் நித்யானந்தன் - ரஞ்சிதா பலான டிவிடி சன் செய்திகளில் ஒளிபரப்பாகி, நாடு முழுவதும் கொதிப்பைக் கிளப்ப, அதிர்ந்து போய்விட்டாராம் தாரா.

இன்று தாராவின் பிறந்த நாள்!

ஆசிரமத்துக்குப் போவீர்களா என அவர் முன் மைக்கை டிவிக்காரர்கள் நீட்டியதுதான் தாமதம். கண்ணீரும் கோபமுமாக பொறிந்து தள்ளினாராம் தாரா.

அவர் கூறுகையில், "என்ன விளையாடறீங்களா.. மனுசன் போவானா இனிமே அந்த ஆசிரமத்துக்குள்ள. ச்சே.. நான் எவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தேன். என்னை மாதிரி எத்தனை லட்சம் பக்தர்கள் தெரியுமா அந்த ஆளுக்கு (!). இப்படி ஒரு அசிங்கம் நடந்த இடத்துல இனி நான் கால் வைப்பேனா?

இந்த பக்தர்களை ஏமாற்ற எப்படி நித்யானந்தனுக்கு மனசு வந்தது. இனி மனித உருவில் சாமிகள் என்று சொல்லும் யாரையும் நம்பக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இந்த ரஞ்சிதா விவகாரத்தின் முழுப் பின்னணியையும் வெளியில் கொண்டுவர வேண்டும். இந்த மாதிரி போலிச் சாமியார்களை ஒழிக்க வேண்டும்...!" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’