வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஐக்கிய தேசியக் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐக்கிய தேசியக் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 மார்ச், 2013

இந்தியாவைப் பகைத்து இலங்கையால் எதுவும் செய்ய முடியாது : ஐ. தே. க.



இலங்கைக்கு எதிரான சர்வதேச தீர்மானங்களை எதிர்கொள்ள அரசாங்கம் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இலங்கையால் ஒருபோதும் முன்னோக்கிச் செல்ல முடியதென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

வியாழன், 21 பிப்ரவரி, 2013

ஹலாலை ரத்துச்செய்ய வேண்டும் இதுவே ஐ.தே.க.வின் நிலைப்பாடு



முஸ்லிம் மக்களின் உலமா சபை வழங்குகின்ற ஹலால் சான்றிதழை ரத்துச்செய்ய வேண்டுமென்பதே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். இதனை 8 வீதமான முஸ்லிம் மக்களுக்கு உணர்த்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் ஹலால் சான்றிதழ் விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடு என்னவென்பதனை வினவுகின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஐ.நா. உள்ளக அறிக்கை தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்: ஐ.தே.க


இ லங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஐ.நா. உள்ளக குழு பான் கீ. மூனுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

திங்கள், 5 நவம்பர், 2012

மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு



ம த்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுனர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வியாழன், 25 அக்டோபர், 2012

வடக்கு தேர்தலை தவிர்க்கவே 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய தீர்மானம்



வட மாகாண சபை தேர்தலில் தன்னால் வெல்ல முடியாது என்பதை நன்கு தெரிந்துகொண்ட அரசாங்கம் வடக்கில் தேர்தல் நடத்துவதை தவிர்ப்பதற்காக 13 ஆம் திருத்தத்தை இரத்துச்செய்ய தீர்மானித்தள்ளது' என எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்று குற்றம்சாட்டியுள்ளது.

திங்கள், 27 பிப்ரவரி, 2012

நாட்டின் சார்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஐ.தே.க. ஆதரவு


நாட்டின் சார்பாக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உறுதியளித்துள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் முழுமையாக எதிர்ப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கூறினார்.

சனி, 25 பிப்ரவரி, 2012

ஜெனீவா யுத்தத்திலும் பொன்சேகா வென்றிருப்பார்: ஐ.தே.க.


நாட்டை பாதுகாப்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அனுமதிக்கப்பட்டிருந்தால் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிலும் இலங்கை சிறந்த நிலையில் இருந்திருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.

புதன், 15 பிப்ரவரி, 2012

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான பேராட்டத்திற்கு த.தே.கூ., ஜே.வி.பி.க்கு ஐ.தே.க. அழைப்பு


ம
க்கள் விடுதலை முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான கூட்டு எதிர்ப்பு போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

வியாழன், 29 டிசம்பர், 2011

பொன்சேகா மன்னிப்புக் கோர வேண்டுமென்பது நகைப்புக்குரியது; கே.பி., கருணா கோரினரா?


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டுமானால் அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என அரசாங்கம் கூறுவது நகைப்புக்குரியது. அப்படியானால் கே.பி., கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் மன்னிப்புக் கேட்டுத்தான் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனரா என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

திங்கள், 12 டிசம்பர், 2011

யாழ்.ஆர்ப்பாட்டத்தின் மீதான அடக்கு முறை குறித்து மனித உரிமை பேரவைக்கு அறிக்கை


சர்வதேச மனித உரிமைகள் தினமான சனிக்கிழமை யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற ஜனநாயக அடக்கு முறை சம்பவமானது இலங்கை அரசாங்கத்தின் மேலுமொரு கறுப்பு தினத்தை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டியி ருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

திங்கள், 5 டிசம்பர், 2011

ஐ.தே.க. தலைமைப் பதவிக்கு கரு ஜயசூரிய போட்டியிடுகிறார்


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடுமாறு சஜித் குழுவினரால் விடுக்கப்பட்ட அழைப்பை அக்கட்சியின் உபதலைவர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார்.

செவ்வாய், 29 நவம்பர், 2011

ஐ.தே.க வின் தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


சி றைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

திங்கள், 7 நவம்பர், 2011

மக்கள் எழுச்சி ஏற்படும்: ஐ.தே.க. எச்சரிக்கை


செயற்பாடு குறைந்த நிறுவனங்கள் மற்றும் பயன்பாடு குறைந்த சொத்துக்களை சுவீகரித்தல் சட்டத்தை அறிமுகப்படுத்தல் போன்ற செயற்பாடுகளால் அரசாங்கம் ஜனநாயகத்தை மீறுமாயின் மக்கள் எழுச்சி ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி

ழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 101,920 வாக்குகளுடன் 24 ஆசனங்களைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. எனினும் அக்கட்சி 53 ஆசனங்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் அறுதிப்பெரும்பான்மையை பெறத் தவறியுள்ளது.

புதன், 15 ஜூன், 2011

தற்போதைய சீபா உடன்படிக்கையில் கையெழுத்திடக்கூடாது: ஐ.தே.க.

இ ந்தியாவுடனான பரந்துபட்ட பொருளாதார பங்குடைமை உடன்படிக்கை யில் (சீபா); அதன் தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடக் கூடாது எனவும் இருதரப்புக்கும் நன்மையளிக்கக்கூடியதாக அதை மாற்ற வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

வியாழன், 28 ஏப்ரல், 2011

நிபுணர் குழுவுடன் அரசாங்கம் ஒத்துழைத்தது: ஐ.தே.க.

ஐ. நா. நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் அக்குழு முன்வைத்த 31 கேள்விகளுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளித்ததாக ஐக்கிய தேசியக் கட்சி இன்று கூறியுள்ளது

வியாழன், 3 பிப்ரவரி, 2011

கே.பி.அரசியலுக்குள் வருவதில் தவறில்லை ஆனால் பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும்

பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான கே. பி.எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் ஜனநாயக நீரோட்டத்துக்குள் நுழைவதில் எந்தத் தவறும் கிடையாது. இருப்பினும் எல்லாவற்றுக்கும் முதலாக சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் இந்நாட்டை மீட்டெடுத்தவருமான சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது

வெள்ளி, 28 ஜனவரி, 2011

அதிகமான உள்ளூராட்சி சபைகளில் ஐ.தே.க.வின் புதிய நிர்வாகம் அமையும்: கருஜயசூரிய _

அ
ரசாங்கத்துக்கு சாதகமாக அமைந்துள்ள அனைத்துப் பகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ள அரசாங்கம் பாதகமான பிரதேசங்களுக்கான தேர்தலை ஒத்திவைத்துள்ளது என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி எது எவ்வாறிருப்பினும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி புதிய நிர்வாகம் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளி, 7 ஜனவரி, 2011

புலிகள் வானொலி கருவிகளை இறக்குமதி செய்வதற்கு நோர்வேயின் உதவியை நாடிய ஐ.தே.க.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வானொலி கருவிகளை இறக்குமதி செய்வதற்கு நோர்வேயின் உதவியை ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் நாடியதாக விக்கிலீக்ஸ் இணையத்ளத்தினால் கசியவிடப்பட்டுள்ள கேபிள் தகவலொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 4 ஜனவரி, 2011

தேங்காய் இறக்குமதி நிறுத்தம்

இந்திய கேரள மாநிலத்திலிருந்து தேங்காயை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்த போதிலும், அந்த இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.