செயற்பாடு குறைந்த நிறுவனங்கள் மற்றும் பயன்பாடு குறைந்த சொத்துக்களை சுவீகரித்தல் சட்டத்தை அறிமுகப்படுத்தல் போன்ற செயற்பாடுகளால் அரசாங்கம் ஜனநாயகத்தை மீறுமாயின் மக்கள் எழுச்சி ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.
ஸிம்பாப்வேயில் எதேச்சதிகார ஆட்சியாளர் ரொபர்ட் முகாபேயும் அந்நாட்டின் சொத்துக்களை சுவீகரிப்பதற்கு இதுபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்தியதாக ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று செய்தியாளர் மாநாடொன்றில் கூறினார். 1956 ஆம் ஆண்டு தனியாருக்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள், பஸ் கம்பனிகள், சுரங்கங்கள் என்பன அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டபோது உள்நாட்டு தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது எனவும் தற்போதைய அரசாங்கம் மீண்டும் அத்தவறை செய்ய முயற்சிக்கிறது எனவும் கரு ஜயசூரிய கூறினார். இந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருபோதும் அப்படி செய்யவில்லை. அவர்கள் தொழில்முனைவோரையும் முதலீட்டாளர்களையும் ஊக்குவித்தனர். அதனால்தான் பிர்லா டாடா போன்ற உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர்கள் உருவானார்கள் எனவும் கரு ஜயசூரிய தெரிவித்தார். இலங்கையில் சில தொழிலதிபர்கள், 1956 ஆம் ஆண்டின் தவறுக்குப்பின்னரும் எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு தலைதூக்கினர். செவனகல சீனித்தொழிற்சாலை உரிமையாளர் தயா கமகே, பெல்வத்தை சீனித்தொழிற்சாலை உரிமையாளர் ஹரி ஜயவர்தன ஆகியோரும் அவர்களில் இருவராவார் என கரு ஜயசூரிய கூறினார்.

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’