வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஐ.நா. உள்ளக அறிக்கை தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்: ஐ.தே.க


லங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஐ.நா. உள்ளக குழு பான் கீ. மூனுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இவ்வாறு அராசங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மீளாய்வு அறிக்கைக்கு அரசாங்கம் பதிலளிக்காவிடின் அது நாட்டின் நலனுக்கு பாதகமாக அமைவதுடன் அந்த அறிக்கையில் உள்ளவற்றை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக அமைந்து விடும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை உரிய முறையில் செயற்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சபர்ப்பிப்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த உள்ளக ஆய்வுக்குழுவானது தனது உள்ளக அறிக்கையை பான் கீ மூனிடம் இம்மாதம் எட்டாம் திகதி சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற துரதி~;ட சம்பவங்கள் மற்றும் அப்பாவி மக்களின் உயிர்களை பாதுகாக்க ஐ.நா. தவறி விட்டது போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதுவரை காலமும் யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு புலிகள் மற்றும் அரசாங்கத்தின் மீதே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டு வந்தன. இந்நிலையில் தற்போது ஐக்கிய நாடுகள் சபை மீதும் குற்றச்சாட்டுக்களும் பொறுப்புக்களும் சுமத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளக மீளாய்வு அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கருத்து எதனையும் வெளியிடாமல் மௌனம் சாதிப்பது ஏன் என்று கேள்வியெழுப்புகின்றோம். அரசாங்கம் ஏன் இந்த விடயத்தில் இந்த விடயத்தில் எந்தவொரு கருத்தையும் வெளியிடாமல் உள்ளது, இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடு என்ன என கேள்வியெழுப்பினார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’