வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 நவம்பர், 2012

யாழ். இளைஞர் யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு அழைப்பு


யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இராணுவத்தின் 513ஆம் படைப்பிரிவினால் அளவெட்டிப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் பொதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் இராணுத்தினர் நிலைகொண்டுள்ளனர். மக்களுக்கு சேவை செய்யவும் பாதுகாப்பு வழங்கவுமே படையினர் நிலைகொண்டு உள்ளனர். இப்பகுதியில் அளவுக்கு அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாக சிலர் பொய்யான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். அவ்வாறு வதந்திகளை பரப்பி வருபவர்கள் மக்களுக்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை ஒன்றும் செய்யப்போவதும் இல்லை. இராணுவத்தினர் இப்பகுதிகளில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கென 1,780 வீடுகள் படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கல்வி, வீடமைப்பு மற்றும் ஏனைய உதவிகள் என இராணுவத்தின் பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். வடபகுதியில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இலங்கை இராணுத்தில் இணைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள இளைஞர் யுவதிகள் இராணுவத்தில் இணைவதற்கு முன்வர வேண்டும். இராணுவத்தை சிங்கள இராணுவம் என்று பார்க்கக் கூடாது. இலங்கை இராணுவம் என்றே பார்க்கவேண்டும். அத்துடன் 1980ஆம் ஆண்டில் நான் இராணுவத்தில் இணைந்தபோது தமிழ் இளைஞர் யுவதிகள் பலர் இராணுத்தில் இருந்தனர். விடுதலைப் புலிகள் அவர்களை அச்சுறுத்தி அவர்களை இராணுத்தில் இருந்து விலக்கினர். இப்போது அந்த நிலமை மாறிவிட்டது. எனவே இப்பகுதியில் இருக்கின்ற இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதற்கு முன்வர வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் கேட்டுள்கொள்கின்றேன்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’