ம த்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுனர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரமிட் கொடுக்கல் வாங்கல், ஹெட்ஜின் கொடுக்கல் வாங்கல், கிரேக்க பிணப்பத்திரங்கள் கொள்வனவு, தி பினான்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தேசிய சேமிப்பு வங்கி கொள்வனவு செய்தமை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுடன் மத்திய வங்கியின் ஆளுனருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அனைத்து மோசடிகளிலும் அஜித் நிவாட் கப்ராலுக்கு தொடர்பு இருப்பதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’