வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 21 பிப்ரவரி, 2013

ஹலாலை ரத்துச்செய்ய வேண்டும் இதுவே ஐ.தே.க.வின் நிலைப்பாடு



முஸ்லிம் மக்களின் உலமா சபை வழங்குகின்ற ஹலால் சான்றிதழை ரத்துச்செய்ய வேண்டுமென்பதே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். இதனை 8 வீதமான முஸ்லிம் மக்களுக்கு உணர்த்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் ஹலால் சான்றிதழ் விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடு என்னவென்பதனை வினவுகின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஹலால் சான்றிதழ் தொடர்பில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவிக்காவிடின் பிலியந்தலையிலிருந்து மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் கூறுகையில், ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பில் பொதுபல சேனா பாரிய கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. ஆனால் ஹலால் சான்றிதழ் விவகாரம் குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாடு என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஹலால் சான்றிதழ் விவகாரம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. அதனை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெளிவாக குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் மக்களின் உலமா சபை வழங்குகின்ற ஹலால் சான்றிதழை ரத்துச் செய்ய வேண்டுமென்பதே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். இதனை 8 வீதமான முஸ்லிம் மக்களுக்கு உணர்த்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’