வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 21 பிப்ரவரி, 2013

இலங்கை தமிழர்களுக்கு சமத்துவம் வேண்டும்: பிரணாப் முகர்ஜி



சிறுபான்மைச் சமூகமான தமிழ்ச் சமூகத்திற்கு சமாதானம், கௌரவம் மற்றும் சமத்துவத்துடன் கூடிய வாழ்க்கையை வழங்குவதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று தெரிவித்துள்ளார். இலங்கையுடனான கூட்டுச் செயற்பாடுகளில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் இந்திய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 'அங்கு இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்வதும் அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதுமே இதில் அடங்கும்' எனவும் அவர் கூறினார். யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியதைக் கருத்திற்கொண்டே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனது உரையின்போது இந்திய ஜனாதிபதி கருத்து எதனையும் கூறவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் 12 வயது மகன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அவர் கருத்து எதனையும் கூறவில்லை. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’