
ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை பெற்று மில்லியன் பவுண் கணக்கில் பெறுமதியான சிறிய ரக ஆயுத தளபாடங்கள், வெடி பொருட்கள் மற்றும் பல்வேறு இராணுவ கருவிகள் கடந்த வருடம் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக லண்டனை தளமாக கொண்ட இன்டிபென்டன்ற் செய்தி வெளியிட்டிருந்தது. "பிரித்தானியா இலங்கை இராணுவத்திற்கான சிறிய ரக ஆயுத ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கவில்லை. பிராந்தியத்தில் இடம்பெறும் கடல் கொள்ளையை தடுப்பதற்காக தனியார் பாதுபாப்பு கம்பனிகளுக்கான சிறிய ஆயுதங்கள் உட்பட சிறிய ரக ஆயுதங்களின் ஏற்றுமதிக்கான அனுமதியே வழங்கப்பட்டிருந்தது" என வெளிவிவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ்ரெய்ர் பேட் ரூவிற் செய்துள்ளார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’