வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 20 பிப்ரவரி, 2013

பிரபாகரன் மகன் படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை: சல்மான் குர்சித்



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் உயிருடன் பிடித்து வைத்துக் கொல்லப்பட்ட ஒளிப்படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களில் வெளியான பாலச்சந்திரனின் ஒளிப்படங்கள் குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளையமகனின் ஒளிப்படங்களைப் பார்த்தேன். ஆனால் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. இலங்கை ஒரு முக்கியமான அயல்நாடு, நண்பன். எல்லாத் துறைகளிலும் இலங்கையுடன் இந்தியா உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. அதேவேளை, மனித உரிமைகள் நிலை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கும் ஆதரவளித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’