
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சென்னை கிளை மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சென்னைக் கிளையுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, அங்குள்ள அதிகாரி றிச்சர்ட் கூறுகையில்,
“இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவொரு பாரிய தாக்குதலல்ல. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா இல்லையா என்பதுபற்றி தெரியவில்லை. எமது அலுவலகத்தின் கண்ணாடிகளுக்கு சிறிய சேதமே ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’