வட மாகாண சபை தேர்தலில் தன்னால் வெல்ல முடியாது என்பதை நன்கு தெரிந்துகொண்ட அரசாங்கம் வடக்கில் தேர்தல் நடத்துவதை தவிர்ப்பதற்காக 13 ஆம் திருத்தத்தை இரத்துச்செய்ய தீர்மானித்தள்ளது' என எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்று குற்றம்சாட்டியுள்ளது.
'வடாமாகாண மக்கள் தமக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதால் வடக்கு மாகாண சபை தேர்தலை அரசாங்கம் தவிர்க்க விரும்புகின்றது' என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உதவி தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்கு போயுள்ளதாலும் யுத்தம் முடிந்த பின்னர் வடக்கு, கிழக்கில் நல்லிணக்கத்தை கொண்டுவர முடியாதிருப்பதாலும் எதுவும் கூற முடியாத நிலையிலுள்ள அரசாங்கம் தேசப்பற்று மற்றும் இனவாதம் என்பவற்றை மூட்டிவிட முயல்கின்றது. 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையல் அதிகாரப் பகிர்வு இடம்பெறும் என இந்த அரசாங்கம்தான் கூறியது. இலங்கைக்கு எதிராக ஐக்கியநாடுகள் மனித உரிமை கவுன்ஸில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அரசாங்கம் இந்த உறுதி மொழியை அளித்தது. ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வந்தபோதும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்னா இலங்கை வந்தபோதும் அரசாங்கம் இதையே கூறியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மூனும் வெளியிட்ட கூட்டறிக்கையிலும் கிருஷ்ணாவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் வெளியிட்ட கூட்டறிக்கையிலும் 13 ஆவது திருத்தத்ததின் அடிப்படையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இந்த நிலைமையில் 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய முயல்வது தற்கொலை முயற்சிக்கு ஒப்பானது' என அவர் கூறினார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’