இ லங்கையின் வீசா விண்ணப்பப்படிவங்கள் 2008 ஆம் ஆண்டு முதல் அதிகமானவை சென்னையிலேயே பரிசீலிக்கப்பட்டு வந்தன. அந்தவகையில் தற்போது கொழும்பில் கையளிக்கப்படும் வீசா விண்ணப்பங்களை சென்னையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் ஐக்கிய இராச்சிய எல்லை முகவரகம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் கையாளுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகராலயத்தின் வீசா பிரிவு இம்மாதம் 31ஆம் திகதியுடன் மூடப்படவுள்ளதாகவும் விண்ணப்பங்களை முன்னர் போன்று வீசா விண்ணப்பநிலையத்தில் ஒப்படைக்கலாமெனவும் 90 சதவீத விண்ணப்பப்படிவங்கள் 15 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளியே கடவுச்சீட்டைக் கொண்டு செல்வதாயின் ஆயிரம் ரூபாவை இலங்கை அரசாங்கத்திற்கு கட்டணமாக வீசா விண்ணப்ப நிலையத்தில் செலுத்துவதுடன் வீசா விண்ணப்ப நிலைய செலவாக 200 ரூபாவும் அறவிடப்படும். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 331 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் டயலொக் பாவனையாளர்கள் 0094773908011 என்ற இலக்கத்துடனும் தொடர்புகொள்ளவும். அல்லது Chennai.visaenquiry@fco.gov.uk என்ற மின்னஞ்சலூடாகவோ அல்லது www.vfs-uk-lk.com அல்லது www.ukba.homeoffice.gov.uk, அல்லது www.ukba.homeoffice.gov.uk/countries/srilanka ஆகிய இணையத்தளங்களினூடாகவோ தகவல்களைப் பெறமுடியும். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’