வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 25 அக்டோபர், 2012

சர்வதேச பொலிஸாரிடம் கே.பி தொடர்பான தகவல்களை ஒப்படைக்கவும் : ஜயலத்



கே.பி என்ற குமரன் பத்மநாதன் தொடர்பான தகவல்களை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டுமென ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஜயலத் ஜயவர்தன பொலிஸ் மா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்த படுகொலைகளுக்கு காரணமாக இருந்த புலி இயக்கத்திற்கு நிதி சேகரித்தமை, அவ் இயக்கத்திற்கு ஆயுதங்களை விநியோகித்தமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக இருந்த சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்ற குமரன் பத்மநாதன் (கே.பி.) சர்வதேச பொலிஸாரால் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றார். எனவே, நாம் நல்ல நிலையில் தொடர்புகளைப் பேணிவரும் சர்வதேச பொலிஸாருக்கு கே.பி. தொடர்பான அனைத்து விபரங்களையும் வழங்க வேண்டியது எமது பொலிஸாரின் பொறுப்பாகும். இதேவேளை, குமரன் பத்மநாதன் தொடர்பான அனைத்து தகவல்களையும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்~;மன் ஹ{லுகல்ல மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆகியோரின் மாநாட்டின் போது வெளியிட்டுள்ளனர். இந் நிலையில் கே.பி. தொடர்பான அனைத்து தகவல்களையும் கூடிய விரைவில் சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’