வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 25 அக்டோபர், 2012

நிறைவேற்று, நீதித்துறைகள் தமது அதிகார வட்டத்திற்குள் செயற்பட வேண்டும்: பீரிஸ்



நிறைவேற்று அதிகாரமும் நீதித்துறையும் தமது அதிகார வட்டத்திற்குள்ளேயே செயற்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நீதிச்சேவை ஆணைக்குழு அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள வரையறைகளை மீறிச் செயற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டிய கடமை பாராளுமன்றத்தின் கடப்பாடாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரனை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடரந்து உரையாற்றுகையில், நீதிக்கும் நியாயத்திற்கும் வேறுபாடு உள்ளது என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நீதித்துறையினால் முழுமையான நியாயம் கிடைத்தது இல்லை. அதனை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது தலைதூக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆழமாக சிந்திக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு பிரச்சினையை தீர்க்கக்கூடாது. நிறைவேற்று அதிகாரமும் நீதித்துறையும் தமது அதிகார வட்டத்திற்குள்ளேயே செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’