ஆ ப்கானிஸ்தானில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 37 பேர் பலியாகியுள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.
வட ஆப்கானிஸ்தானிலுள்ள பார்யாப் மாகாணத்திலுள்ள பள்ளிவாசலொன்றிலேயே இத்தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஹஜ் அல் அதா விடுமுறையையொட்டிய தொழுகையில் ஈடுபட்ட மாகாண ஆளுநரும் பொலிஸ் தலைமை அதிகாரியும் படுகாயமின்றி தப்பியுள்ளதாகக் கூறியுள்ளனர். பலியானவர்களில் சிவிலியன்களும் பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிவாசலை நெருங்கிய தற்கொலைதாரி, ஹஜ் தொழுகை முடிவடைந்த பின்னர் தனது உள்ளாடையினுள் வைத்திருந்த குண்டை வெடிக்க வைத்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’