வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி

ழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 101,920 வாக்குகளுடன் 24 ஆசனங்களைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. எனினும் அக்கட்சி 53 ஆசனங்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் அறுதிப்பெரும்பான்மையை பெறத் தவறியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 77,089 வாக்குகளுடன் 16 ஆசனங்களை பெற்றுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி 26,229 வாக்குகளைப்பெற்று 6 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 9,979 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும், ஜனநாயக ஐக்கிய முன்னணி 7,830 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. அத்தொடு, 2ஆம் இலக்க சுயேட்சைக் குழு 4085 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தினையும் ஜே.வி.பி. 3162 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தினையும் 1ஆம் இலக்க சுயேட்சைக் குழு 2962 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’