நாட்டை பாதுகாப்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அனுமதிக்கப்பட்டிருந்தால் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிலும் இலங்கை சிறந்த நிலையில் இருந்திருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
யுத்தத்தின் கடைசிக்கட்டத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை கூறுவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவை சரத் பொன்சேகா சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென தான் கோரியதை அரசாங்கம் செவிமடுத்திருக்க வேண்டும் எனவும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’