வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பொலிஸார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொலிஸார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 மார்ச், 2013

'பெஷன் பக்' மீதான தாக்குதலுக்கு காதல் விவகாரமே காரணம்: பொலிஸ்



பொரலஸ்கமுவ, பெபிலியானவில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு காதல் விவகாரமொன்றினால் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமையே காரணம் என விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய், 12 மார்ச், 2013

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி


இனந்தெரியாதவர்கள் நடத்திய துப்பாகி பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.திவுலப்பிட்டிய பாதுராகொட பொத்தேலவல எனுமிடத்திலேயே இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

புதன், 1 ஆகஸ்ட், 2012

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 28,000 பேர் கைது



பொ லிஸ் மா அதிபரின் பணிப்பின் பேரில் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 28,000 பேர் கடந்த ஜுலை மாதம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதன், 22 செப்டம்பர், 2010

பாதாள உலக நபர் சுட்டுக்கொலை

ஹங்வெல்ல பகுதியில் பொலிஸாரைத் தாக்குவதற்கு முயற்சித்த பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

சனி, 4 செப்டம்பர், 2010

18 பெண்களை காதலித்து ஏமாற்றிய நபர் கைது

18 இளம் பெண்களை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதுடன் அவர்களிடமிருந்து தங்க நகைகளையும் அபகரித்த 35 வயதான நபர் ஒருவரை ரத்தொட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

தொழில்பெற்றுத் தருவதாகக் கூறி, மோசடி செய்த பெண் கைது

வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி, பலரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாவை வசூலித்து மோசடி செய்த பெண்ணொருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

திருமணத்தின் பின் வெளிநாடு செல்ல பணம் தேவையெனக் கூறி மோசடி செய்த சந்தேக நபர் கைது

திருமணத்தின் பின்னர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதற்கு விசா பெற்றுக்கொள்வதற்கான செலவீனங்களுக்காக ஒரு மில்லியன் ரூபா பணம் தேவைப்படுவதாகக் கூறி தான் திருமணம் முடிக்கவிருந்த ஆசிரியைஒருவரிடமிருந்து பண மோசடி செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மாறவிலப் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

வடக்கில் இயங்கி வந்த இரண்டு கப்பம் கோரும் குழுக்கள் கைது

வடக்கில் இயங்கி வந்த இரண்டு கப்பம் கோரும் குழுக்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

செவ்வாய், 27 ஜூலை, 2010

உரப்பையினால் சுற்றப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

மகியங்கனை ரிதிமாலியத்தைப் பகுதியில் உரப்பையினால் சுற்றப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று முற்பகல் மீட்டுள்ளனர்.

திங்கள், 26 ஜூலை, 2010

பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது

ருகுணு பல்கலைக்கழக மாணவனான சுசந்த அருண பண்டாரவின் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யும்படியான சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த மாணவர்கள் 6 பேரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஞாயிறு, 25 ஜூலை, 2010

திட்டமிட்டு மோட்டார் சைக்கிள்களைத் திருடும் மூவர் கைது

பல்வேறு இடங்களில் திட்டமிட்ட அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களைத் திருடும் மூவர் கொண்ட ஒரு குழுவை மாத்தளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெள்ளி, 16 ஜூலை, 2010

மலையகத்தில் நேற்றும் இன்றும் நான்கு பெண்கள் தற்கொலை

மலையகத்தில் நேற்றும் இன்றும் பாடசாலை மாணவியொருவர் உட்பட நான்கு பெண்கள் தற்கொலை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் மூன்றுபேர் பொகவந்தலாவையைச் சேர்ந்தவர்கள் என எமது மலையக செய்தியாளர் தெரிவிக்கிறார்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

இராணுவ வீரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சக வீரர் பலி; மூவர் காயம்

கந்தளாய், சேருநுவர பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவரது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் படைவீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளி, 9 ஜூலை, 2010

குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் வைத்தியர் கைது

பிறந்து 3 நாள்களேயான குழந்தையொன்றை விற்பனை செய்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்திய ஒருவர் நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

புதன், 16 ஜூன், 2010

பசிக்கு உணவு கேட்ட பெற்றோருக்கு இரும்பு பொல்லால் பதிலளித்த மகன்

பசிக்கின்றது எனக்கூறி தமது மகனிடம் உணவு கேட்டுச் சென்ற பெற்றோரை இரும்பு பொல்லால் தாக்கி விரட்டியடித்த மகனைத் தேடி பொலிஸார் வலை வீசியுள்ள சமபவமொன்று பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

செவ்வாய், 15 ஜூன், 2010

விபசார விடுதி முற்றுகை; நான்கு பெண்கள் கைது

பொரலஸ்கமுவ பகுதியில் விபசார விடுதியொன்றை முற்றுகையிட்டுள்ள பொலிஸார் நான்கு பெண்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

சனி, 12 ஜூன், 2010

மாணவன் தாக்கி சக மாணவன் உயிரிழப்பு

ஆனமடுவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவனின் தலையை பிடித்து சக மாணவன் குழாய் கிணற்றில் தாக்கியதால் காயத்திற்குள்ளானவர் உயிரிழந்துள்ளார்.


புதன், 19 மே, 2010

புலிப் பிரமுகர் கல்கிசையில் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப் பின் முன்னாள் முக்கிய பிரமுகர் ஒருவர் கல்கிசையில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரி விக்கப்படுகிறது.

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் அக்குறணையில் மரணம் _

அக்குறணை குருகொட என்ற இடத்தைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மொகமட் இக்பால் மொகமட் தையூப் என்பவரே மேற்படி சம்பவத்தில் மரணமானவர் என அளவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த நபருக்கும் அயல் வீட்டு நபர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை அடுத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியால் அயல்வீட்டு நபர் குத்தியதால் அவர் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அளவத்துகொடைப் பொலிஸார் இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். _

திங்கள், 8 மார்ச், 2010

கொழும்பு முகத்துவாரத்தில் ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு முகத்துவாரம் பெர்குஷன் வீதிக்கு அருகில், சேற்றுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் இன்றுமாலை வரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. _