வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் அக்குறணையில் மரணம் _

அக்குறணை குருகொட என்ற இடத்தைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மொகமட் இக்பால் மொகமட் தையூப் என்பவரே மேற்படி சம்பவத்தில் மரணமானவர் என அளவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த நபருக்கும் அயல் வீட்டு நபர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை அடுத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியால் அயல்வீட்டு நபர் குத்தியதால் அவர் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அளவத்துகொடைப் பொலிஸார் இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’