நீண்ட காலத்திற்குப் பின்னர் அறுதிப் பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைவதும் பல புதிய முகங்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருப்பதும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்துடனான பாராளுமன்றத்தின் விசேட அம்சங்களாக உள்ளன.
நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இந்தத் தேர்தல் முறையின் கீழ் அறுதிப் பெரும்பான்மையுடனான அரசாங்கம் அமையவுள்ளது. கடந்த 8ம் திகதி நடந்த தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலுமிருந்து பல புதுமுகங்கள் தெரிவாகியிருக்கிறார்கள்.
வெளியிடப்படாத இரண்டு மாவட்ட முடிவுகளை விட 20 மாவட்டங்களில் ஐ.ம.சு.மு. 117 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐ. தே. கட்சி 46 ஆசனங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்துள்ளது. தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் போட்டியிட்டு 12 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. வெற்றிக் கிண்ண சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தேசிய முன்னணி 5 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாந்தோட்டையில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ கம்பஹா மாவட்டத்தில் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே மாத்தறை மாவட்டத்தில் சனத் ஜயசூரிய கொழும்பு மாவட்டம் துமிந்த சில்வா திலங்க சுமதிபால மாத்தளை மாவட்டத்தில் சட்டத்தரணி வசந்த பெரேரா காலி மாவட்டத்தில் நிஷாந்த முத்துஹெட்டிகம சஜித் வாஸ்குணவர்தன களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்காவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க யாழ். மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. சார்பில் போட்டியிட்ட அலன்ரின் உதயன் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். சரவணபவன் சி. சிறிதரன் ஐ.தே.க. சார்பில் காலஞ்சென்ற முன்னாள் ஐ.தே.க. எம்.பியின் மனைவி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் புதிதாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’