வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பாராளுமன்றத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாராளுமன்றத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களை தடுக்கும் சட்டம் மூலம் நிறைவேற்றம்


யங்கரவாதிகளுக்கு அல்லது பயங்கரவாத அமைப்பிற்கு பணம் அல்லது பொருள் உதவிகள் வழங்குவதனை தடுக்கும் வகையில் புதிய சட்டம் திருத்த மசோதா சற்றுமுன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

48 மணி நேரம் தடுத்து விசாரணை செய்யும் சட்டமூலம் 77 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்


குற்றவியல் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான சட்டமூலம் 77 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வியாழன், 20 ஜனவரி, 2011

கொலை,கொள்ளை குடாநாட்டு விவகாரம் தொடர்பில் நாலரை மணிநேரம் ஒத்திவைப்பு வேளை விவாதம்

யாழ். குடாநாட்டு நிலைவரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நாலரை மணிநேரம் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெறவிருக்கின்றது.

புதன், 21 ஜூலை, 2010

சர்வகட்சிக் குழுவின் அறிக்கைக்கு ஆளும்கட்சி சபையில் கடும் எதிர்ப்பு

சர்வகட்சிக் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. ஆர். யோகராஜனுக்கு இடையூறுகளை ஏற்படுத்திய ஆளும் தரப்பினர், அவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு கடுமையான எதிர்ப்பினையும் தெரிவித்தனர். சர்வகட்சிக்குழுவை சமர்ப்பிப்பதற்கு யோகராஜன் எம்.பி. தகுதியற்றவர் எனக் கூக்குரலிட்ட ஆளும்கட்சி அதனை ஹன்சாட்டில் இருந்து நீக்கிவடிடுமாறும் கூச்சலிட்டனர்.

வெள்ளி, 18 ஜூன், 2010

படைவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவு தின வைபவம் பாராளுமன்ற மைதானத்திலும் நடைபெற்றன.

நாட்டிற்காக யுத்தத்தில் உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவுதினம் இன்று (18) மாலை சிறி ஜெயவர்த்தனபுரவிலுள்ள பாராளுமன்ற மைதான வளாகத்தில் நடைபெற்றன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

புதிய முகங்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு!

நீண்ட காலத்திற்குப் பின்னர் அறுதிப் பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைவதும் பல புதிய முகங்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருப்பதும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்துடனான பாராளுமன்றத்தின் விசேட அம்சங்களாக உள்ளன.

சனி, 7 நவம்பர், 2009

கடலைக் கடையா? பாராளுமன்றமா? ஆளுந்தரப்பினர் கேள்வி


அவைக்கு தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே! இது கடலைக் கடையா? பாராளுமன்றமா? என்று ஆளுந்தரப்பினர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கேள்வி எழுப்பினர். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே ஆளுந்தரப்பினர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினர். ஆளும் கட்சியின் எம்.பி.யான லலித் திஸாநாயக்க, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய இருவருமே ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி மேற்கண்ட கேள்வியை எழுப்பினர்.

அவசரகாச் சட்டத்தின் மீது ஜே.வி.பி. எம்.பி.யான எஸ். சுபசிங்க உரையாற்றிக்கொண்டிருந்த போது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அடிக்கொரு தடவை ஒழுங்குப் பிரச்சினையை கிளப்பி இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தார். அவருடன் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, ஆளுங்கட்சியின் எம்.பி.யான லலித் திஸாநாயக்க ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

இதனிடையே அவைக்குள் பிரவேசித்த ஐ.தே.க. எம்.பி.யான தயாசிறி ஜயசேகர எதிர்க்கட்சி பின்வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்த கொட்டபொல அமரகீர்த்தி தேரரிடம் கடலை பேக்கை வாங்கி கையில் ஏந்தியவாறு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

இதனை அவதானித்த லலித் திஸாநாயக்க எம்.பி. ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி அவைக்கு தலைமை தாங்கும் உறுப்பினரை இது பாராளுமன்றமா? கடலை கடையா? கடலை கொண்டு வந்தவர் நாளை குண்டு கொண்டு வரலாம். இது சிறப்புரிமை பிரச்சினையாகும் என்று சுட்டிக்காட்டினார்,. இதனை அவதானித்த தயாசிறி எம்.பி. சிரித்துக்கொண்டே இவரையா கூறுகின்றீர்கள் என கொட்டபொல அமரகீர்த்தி தேரரை காண்பித்து சைகையில் கேட்டு விட்டு அவையை விட்டு வெளியேறிவிட்டார்.

புதன், 4 நவம்பர், 2009

கணக்கு வாக்கெடுப்பில் 4 மாத செலவிற்கு 36,268 கோடியே 79 இலட்சம் ரூபா ஒதுக்கீடு-பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிப்பு


ஆம் ஆண்டிற்கான முதல் நான்கு மாதங்களுக்கான செலவிற்கென 36,268 கோடியே 79 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாவிற்கான கணக்கு வாக்கெடுப்பு பிரேரணையை பிரதி நிதியமைச்சரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான சரத் அமுனுகம பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தார். கணக்கு வாக்கெடுப்பின் பிரகாரம் 66 அமைச்சுகளுக்கென 23 063 கோடியே 57 இல ட்சத்து 33 ஆயிரம் ரூபாவும் திணைக்கள ங்களுக்கென 12 582 கோடியே 97 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஜனாதிபதியின் தலைப்பின் கீழ் 2300 கோடியே 32 இலட்சம் ரூபாவும் பிரதம அமைச்சர் அலுவலகத்திற்கு 654 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் நேற்றுக்காலை 9.30 மணிக்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்திற்கு பின்னர் கணக்கு வாக்கெடுப்பு பிரேரணையை பிரதி நிதியமைச்சரும் அமைச்சருமான சரத் அமுனுகம சமர்ப்பித்து உரையாற்ற முனைந்தார்.

இதனிடையே குறுக்கிட்ட எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் எம்.பி. யுமான ஜோசப் மைக்கல் பேரேரா எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒழுங்கு பிரச்சினையை கிளப்பி கணக்கு வாக்கெடுப்பு அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் முரணானதாகும் என்று சுட்டிக் காட்டினர். இதனால் சபையில் பெரும் சர்ச்சை நிலவியது. அதற்கு மத்தியிலேயே பிரதிநிதியமைச்சர் பிரேரணையை சமர்பித்து உரையாற்றினர்.

கணக்கு வாக்கெடுப்பு யோசனையின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சுக்கு 210 கோடியே 91 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாவும் தரைப் படைக்கு 3454 கோடியே 56 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாவும் கடற்படைக்கு 11600 கோடியே 66 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாவும் விமானப் படைக்கு 7816 கோடியே 66 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாவும் பொலிஸ் திணைக்களத்திற்கு 1240 கோடியே 17 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாவும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 2978 கோடியே 33 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவும் கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்திற்கு 1 கோடியே 66 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்திற்கு 49 கோடியே 90 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாவும், பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகத்துக்கு 69 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாவும், பாராளுமன்ற பிரதான அரசாங்க கொறடாவின் அலுவலகத்திற்கு 82 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாவும், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு 177 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேர்தல்கள் திணைக்களத்திற்கு 36 கோடியே 62 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாவும், தேசியக் கல்வி ஆணைக்குழுவிற்கு 97 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாவும், மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாட்டு அமைச்சுக்கு 125 கோடியே 31 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவும் புத்த விவகாரங்கள் திணைக்களத்திற்கு 165 கோடியே 29 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாவும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு 38 கோடியே 71 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாவும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்திற்கு 23 கோடியே ஆயிரம் ரூபாவும் இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களத்திற்கு 40 கோடியே 53 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தேசிய வரவு செலவு திட்ட திணைக்களத்திற்கு 1692 கோடியே 61 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாவும் மது வரித் திணைக்களத்திற்கு 142 கோடியே 40 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவும் சட்ட அலுவல்கள் திணைக்களத்திற்கு 1 கோடியே 88 இலட்சத்து 7 ஆயிரம் ரூபõவும் தேசத்தை கட்டியெழுப்புதல் நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு 1867 கோடியே 78 இலட்சத்து 83 ஆயிரம் ரூபாவும் சமூர்த்தி திணைக்களத்திற்கு 3894 கோடியே 78 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாவும் இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சுக்கு 542 கோடியே 49 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சுக்கு 196 கோடியே 42 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாவும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு 1036 கோடியே 63 இலட்சத்து 3 ஆயிரம் ரூபாவும் சுகாதார நலத்துறை மற்றும் போசணை அமைச்சுக்கு 1966 கோடியே 66 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு 187 கோடியே 40 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாவும் போக்கு வரத்து அமைச்சுக்கு 2746 கோடியே 15 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாவும் பெற்றோலிய வள அமைச்சுக்கு 147 கோடியே 23 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சகல மாவட்ட செயலகங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது கல்வி அமைச்சுக்கு 8556 கோடியே 55 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாவும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு 505 கோடியே 82 ஆயிரம் ரூபாவும் வடக்கு மாகாண சபைக்கு 3519 கோடியே 25 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாவும் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சுக்கு 4363 கோடியே 93 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாவும் மீள் குடியமர்த்துகை அனர்த்த நிவாரன அமைச்சுக்கு 521 கோடியே 49 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாவும் உயர் கல்வி அமைச்சுக்கு 1947 கோடியே 16 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.