நாட்டிற்காக யுத்தத்தில் உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவுதினம் இன்று (18) மாலை சிறி ஜெயவர்த்தனபுரவிலுள்ள பாராளுமன்ற மைதான வளாகத்தில் நடைபெற்றன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பயங்கரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்ட ஓராண்டு பூர்த்தி; வெற்றியைக் கொண்டாடும் தேசிய வெற்றி விழா மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு இன்று காலை 8 மணிக்கு காலி முகத்திடலில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் படைவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவுதினம் இன்றுமாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமர் தி.மு.ஜெயரத்ன ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்பாய ராஜபக்ச முப்படைத் தளபதிகள் பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு அதிகாரசபைத் தலைவி திருமதி பத்மா வட்டவ ஆகியோருடன் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’