யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்கள் மற்றும் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (17) காலை யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஸ் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெனாண்டோ மற்றும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சினைகளை ஆராய்ந்தனர்.
இதில் உயர்பாதுகாப்பு வலயமாக இருக்கும் வலி வடக்கு தென்மராட்சி கிழக்கு வடமராட்சி கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் இவர்களுக்கான நிவாரணத்தை மேலும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதேச செயலக செயலர்களும் திணைக்கள அதிகாரிகளும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’