வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 ஜூன், 2010

கிளி. முழங்காவில் பகுதியில் மீளக்குடியேறிய மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

முழங்காவில் பிரதேசத்தில் மீளக்குடியேறியுள்ள மக்களின் தற்போதைய நிலவரம் குறித்து நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் திரு. சந்திரகுமார் முருகேசு அவர்கள் நேற்றைய தினம் (16) சந்தித்துக் கலந்துரையாடினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஏற்கனவே ஆலயப்புனரமைப்பு, முன்பள்ளி ஆகியவற்றுக்காக வழங்கிய நிதிக்கமைய மேற்கொள்ளப்பட்ட வேலைகளைப் பற்றியும் பாடசாலையில் குடிநீரைப் பெறுவதற்கான நீர் இறைக்கும் இயந்திரத்தைப் பெறுவதற்காக வழங்கப்பட்ட நிதி தொடர்பாகவும் ஆராய்ந்த பின்னர் மக்களின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது தாம் இன்றும் பல்வேறுபட்ட தேவைகளுடன் வாழ்வதாகத் தெரிவித்த அம்மக்கள் மாரி காலத்துக்கிடையில் தமக்கான வீட்டு வசதியைத் துரிதப்படுத்தி தருமாறும் மாதர் சங்கங்களின் மூலம் பெண்களின் சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்காக உதவுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில் மீண்டும் முழங்காவில் பிரதேசத்தில் விவசாயச் செய்கையை சீராக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கையை எடுத்தால் மக்களின் இயல்பு வாழ்வை மேம்படுத்தலாம் எனவும் தெரிவித்தனர். 
இதேவேளை, பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் இவ்வாறான பணிகளுக்கு இந்தப் பிரதேசங்களில் இருந்தே பணியாளர்களைச் சேர்த்துக் கொண்டால் வேலையில்லாப் பிரச்சினைக்கு குறைந்த பட்சத்தீர்வு காண முடியும் எனவும் முழங்காவில் பிரதேசத்துக்கு இன்னும் நிரந்தர மருத்துவர் இல்லாத காரணத்தினால் 800 குடும்பங்கள் வரையில் பாதிக்கப்படுவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் உடனடித் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் மக்களின் தொழில் முயற்சிகளுக்கும் உதவுவதாகத் தெரிவித்தார்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’