வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி, பலரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாவை வசூலித்து மோசடி செய்த பெண்ணொருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்
.52 வயதான இப்பெண், வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு நெருக்கமானவராக தம்மை இனங்காட்டிக் கொண்டு இம்மோசடியை புரிந்துள்ளார்.
இலங்கைக் கிரிக்கெட் சபை, கொழும்புத் துறைமுகம், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் அமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்தி வேலை வாய்ப்புப் பெற்றுத்தருவதாக அப்பெண் உறுதியளித்தாராம்.
அவரிடமிருந்து 18 விண்ணப்பங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரை நாளை மறுதினம் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’