18 இளம் பெண்களை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதுடன் அவர்களிடமிருந்து தங்க நகைகளையும் அபகரித்த 35 வயதான நபர் ஒருவரை ரத்தொட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவருடன் காதல் தொடர்பு கொண்டிருந்த பெண்ணொருவர் செய்த புகாரையடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
இச்சந்தேக நபர் 18 பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்ததுடன் அவர்களில் நான்கு பேரை திருமணம் செய்ததாகவும் மேலும் நால்வருடன் ஒன்றாக வசித்துள்ளதாகவும் தமது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்நபர் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதையடுத்து, நான்கு பெண்கள் ரத்தொட்டை பொலிஸில் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’