வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 4 செப்டம்பர், 2010

இந்திய வம்சாவளி மக்களின் காணிகள் திரும்பக் கையளிக்கப்படும் : நிருபமா ராவ்

ந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இடம்பெயர்ந்த மக்களுக்கு உரித்தான வவுனியாவிலுள்ள காணிகளை இராணுவத்தினர் மீளக்கையளிப்பர் என இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் உறுதிமொழியளித்துள்ளதாக நிருபமா ராவ் சுட்டிக்காட்டினார்
.அடிப்படையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இடம்பெயர்ந்த மக்கள் 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் பின்னர் வவுனியாவில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்களாவர்.
அவர்கள் தமது நிலத்தில் விவசாயநடவடிக்கையில் ஈடுபட்டுவந்தனர் ஆனால் யுத்தத்தின் பின்னர் அவர்கள் மெனிக் பாமிற்கு இடம்பெயர நேர்ந்தது . அங்கு சுமார் 1000 அங்கத்தவர்களை உள்ளடக்கிய 150 குடும்பங்கள் உள்ளன. அவர்கள் வாழ்விடங்களுக்கு திரும்பிச்செல்வதில் சில கஷ்டங்களை எதிர்;கொண்டுள்ளனர். தமக்குரிய காணிகளை இராணுவத்தினர் .
கையகப்படுத்தியுள்ளமையால் தாம் வாழ்ந்த பகுதிகளுக்கு மீண்டும் திரும்பிச்செல்ல முடியாத சிக்கல் நிலை காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். என செய்தியாளர்களிடம் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் குறிப்பிட்டார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தினர் இப்பகுதிகளுக்குள் நகர்ந்துள்ளதால் மக்களுக்கு சொந்தமான காணிகளை விட்டு;க்கொடுக்கவோ அங்கு அனுமதிக்கவோ இல்லை எனத் தெரிவித்த திருபமா ராவ் அந்தவகையில் இவ்விடயத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்றதாக குறிப்பிட்டார்
இந்த விடயத்தை நான் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவிடம் எடுத்துரைத்தேன். இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே கவனம் செலுத்திவருவதாக அவர் என்னிடம் உறுதியளித்தார் இவ்விடயத்திற்கு தீர்வுகாணப்படும் எனவும் மக்கள் திரும்பிச்செல்வார்கள் எனவும் அவர் எதிர்பார்க்கின்றார். என இந்திய வெளிவிவகாரச் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு செயதியாளர்களிடம் கருத்துவெளியிட்ட நிருபமா ராவ் தாம் சுமார் ஒன்றரை நாட்கள் காலப்பகுதியில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சுமார் 1100 கிலோமீற்றர் பயணம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார செயலாளர் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் கிளிநொச்சி ஓமந்தை யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இது மிகவும் பயனுள்ள விஜயமாகும். நான் பெருமளவு இடங்களுக்கு செல்ல முடிந்ததுடன் அரசாங்கம் எதிர்க்கட்சிகள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களிலுள்ள மக்கள் என பெரும் எண்ணிக்கையாளவர்களை சந்தித்தேன். எனக்குறிப்பிட்ட அவர் சிறுபான்மையினர் மத்தியிலுள்ள அரசியல்கட்சிகளுடன் கலந்துரையாட முடிந்ததாகவும் இது மிகவும் ஆக்கப+ர்வமான விஜயம் எனத் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கிற்கான தமது விஜயத்தின் போது சிறப்பான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்ததாக ராவ் பாராட்டுத்தெரிவித்ததார்.
நேற்று முன்தினம் இந்திய உயர்ஸ்தானிகள் அசோக் கே காந்தா அளித்த இராப்போசன விருந்;துபசாரத்தின் பஸில் ராஜபக்ஸ கோத்தபாய ராஜபக்ஸ உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலருடன் இந்திய வெளிவிவகாரச் செயலாளார் கலந்துரையாடியிருந்தார்.
தனது விஜயத்தின் போது தமிழ் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களைச் சந்தித்ததற்கு அப்பால் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்ததாக நிருபமா ராவ் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’