வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நடந்த வன்கொடுமைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடந்த வன்கொடுமைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 ஏப்ரல், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……

நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 32)

(கிறேசியன், நாவாந்துறை)

2002 முதல் 2006 வரை ஒரு கோமாளித்தனமான ஆட்சியை நடத்தினார்கள் வன்னியில் புலிகள். யாழ்ப்பாணம் செல்லும் மக்களிடம் வரி அறவிட்டனராம். அது வரியல்ல வழிப்பறி. அந்தக் காலத்தில் நடைப்பயணம் போவோரிடத்தில் வழிப்பறி செய்வார்கள் கொள்ளையர்கள். அது போன்றதோர் கொள்ளையை 21ம் நூற்றாண்டில் செய்தனர் புலிகள். இந்தக் கொள்ளையை யாழ்ப்பாணத் தமிழர்களிடத்தில் அடித்தனர். தமிழரிடம் கொள்ளை அடிக்க சிங்கள அரசிடம் அனுமதி கேட்டனர் புலிகள். 150 ரூபா அலுமினியப் பானைக்கு 250 ரூபா வழிப்பறி வரி போட்டவர்கள் புலிகள்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……

நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 30)

(கிறேசியன், நாவாந்துறை)

சிறிது நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் தோழரது முகத்தில் துணியைப் போட்டனர். மஞ்சு அவரது நெஞ்சில் ஒரு காலை வைத்து மிதித்தார். சின்னக் கேடியும் தனது வலது காலால் அவரது வயிற்றில் மிதித்தார். வேறொருவர் அவரது தலைப் பகுதியில் இருந்து கொண்டு இரண்டு கைகளாலும் அவரது நாடியைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தார். கௌதமன் போத்தலில் இருந்த தண்ணீரை அவரது மூக்கின் மேல் ஊற்றினார். அவர் திணறினார். கால்களை இழுத்தார். மூக்கு வழியாக சத்தம் வந்தது. தலைப் பகுதியிலிருந்தவர் கைகளை எடுத்து அவரது கன்னத்தில் இரண்டு கைகளாலும் அறைந்தார். சத்தம் போடாமல் இரடா என்றார். ஆட்டாமல் இரடா என்றார். டே, இவன்ர கால் சங்கிலி லூசா இருக்கடா! கயித்தால இழுத்து பிக்காசில கட்டடா என்று கௌதமன் கத்தினார்.

திங்கள், 19 ஏப்ரல், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……

நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 28)

(கிறேசியன், நாவாந்துறை)

நான் தினமும் புதிய வரவுகளை பார்த்திருப்பேன். காரணம் நாங்கள் வெளிநபர்கள் யாரையும் பார்க்க முடியாது. வதைசெய்யும் புலிகளைப் பார்க்கவே வெறுப்பாக இருக்கும். புதிதாக பிடித்து வரும் சகோதரர்கள் மூலமாகத்தான் வெளியில் நடப்பவற்றையும், புதிய செய்தியையும் அறியலாம்.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……

நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 26)

(கிறேசியன், நாவாந்துறை)

என்னை விடுவித்து பாதரிடம் ஒப்படைத்த புலிகளது முகங்களில் ஓர் விறைப்புத் தன்மை இருந்தது. இப்படிப் பிடித்து வந்த ஒருவருக்கு அடி உதை கொடுக்காமல் விடுகிறோமே என்ற ஏக்கம் அவர்களின் முகங்களில் பிரதிபலித்தது! அப்படி விட்டுச் சென்ற பின்னர் புலிகள் எங்கள் பகுதிக்குள் வந்து எந்தத் தொந்தரவும் தரவில்லை. காரணம் மக்கள் ஒற்றுமையாக இருந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்படிக் கூறிய ஜெகன் ஞானதாஸ் தொடர்ந்தார்:-

சனி, 17 ஏப்ரல், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……


நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 24)

(கிறேசியன், நாவாந்துறை)

தொடர்ந்து கேள்வி கேட்டால் இவர்கள் பதில் சொல்வார்கள் என்று நினைத்துக் கொண்டு நடராஜ் அவர்கள் விடாமல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார். நாங்கள் இருந்த வீட்டின் ஹோலின் வாசலில் நடராஜ் அவர்களை இருக்கும்படி பணித்திருந்தனர். அவர் வாசலில் இருக்கும் போது எந்தப் புலி விலங்கு உள்ளே வந்தாலும் முதலில் அவரைத்தான் அடிப்பார்கள். அனைவருக்கும் அடித்து முடித்துவிட்டு வெளியில் செல்லும் போது மீண்டும் அவரை அடித்துவிட்டுத்தான் செல்வார்கள்.

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……


நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 22)

(கிறேசியன், நாவாந்துறை)

இரண்டு நாட்கள் தொடர்ந்து காலையில் வந்து அனைவருக்கும் அடித்தார்கள். மூன்றாவது நாள் புதிதாகச் சில சகோதரர்களைக் கொண்டு வந்தார்கள். அவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐ சேர்ந்த 4 பேர் ஈ.என்.டி.எல்.எப். ஐ சேர்ந்த ஒருவரும், ஆதரவாளர் ஒருவரும், டெலொ இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரும் இருந்தனர். இவர்கள் தவிர போலியோ நோயால் பாதிக்கப்பட்ட நடராஜ் என்பவரும் இருந்தார்.

வியாழன், 15 ஏப்ரல், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……


நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 20)

(கிறேசியன், நாவாந்துறை)

ஒரு மாலைப் பொழுதில் ஒரு குழு வந்தது. குழுவின் தலைவருக்குப் பெயர் சின்னக் கேடி. ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க அங்கத்தினர் ஒருவரது பெயரைச் சொல்லி அழைத்தது சின்னக் கேடி குழு. அவர் வெளியே சென்றார். வீட்டு வளையின் மீது கைவிலங்கைப் போட்டு, அவரை ஓர் வாங்கின் மீது ஏறச் சொல்லி அந்த விலங்கை அவரது கைகளில் பூட்டினர். பின்னர் வாங்கை எடுத்துவிட்டனர். அவர் வேதனையில் துடித்து அலறினார், “எங்கேடா ஆயுதங்களைப் புதைத்து வைத்திருக்கிறாய்” என்று கேட்டு சின்னக் கேடியும், வேறு சில கேடிகளும் அவரைத் தடிகளால் அடித்தனர். அவர் தொங்கவிடப்பட்டுள்ளார்.

புதன், 14 ஏப்ரல், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……

நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 18)

(கிறேசியன், நாவாந்துறை)

அம்மா ஆரம்பித்தார், தம்பி நானும் உன்ர அக்காவும் அவங்கட ஒப்பீஸ் வாசலுக்குச் சென்று நிக்காத நாளே கிடையாது. உன்னை கூட்டிச் சென்ற அன்றே நாங்கள் எல்லாரும் அவங்கட ஒப்பீசுக்கு ஓடிச் சென்றோம். தொடர்ந்து ஒரு வருசமாக காலம்பிற சாப்பாட்டுடன் போனால் இரவு ஏழுமணிக்குத் தான் வீட்டுக்கு வருவோம். ஒருத்தன் ஒரு கதை சொல்வான். பொய் சொல்லி ஏமாற்றுவதற்கென்றே அங்க ஆக்கள வச்சிரிக்கினம்.


திங்கள், 12 ஏப்ரல், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……


நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 16)

ஒருநாள் மாலைப் பொழுதில் பத்துப்பதினைந்து புலி விலங்குகள் ஓர் குழியை நோக்கிச் சென்றனர். அந்தக் குழியில் புளொட் ஆதரவாளர் ஒருவர் இருந்தார். அவர் ஆறு ஏழு நாட்களாக வெளியே வராமல் இருந்தார். அவருக்கு ஏதோ உடல் பாதிக்கப்பட்டுள்ளது போலும் என்று நினைத்துக் கொண்டேன். இந்தப் புலிகள் அவரது குழியை நோக்கிச் செல்வதைக் கண்டு நானும் உன்னிப்பாகக் கவனித்தேன்.


ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

1990 முதல் 2009 வரை புலிகள் (அட்டைகளின்) ஆட்சியில்……


நடந்த வன்கொடுமைகள்! - கிறேசியன்! (பாகம் -14)

புலிகள் பிடித்துவைத்திருந்த தமிழ் இளைஞர்களில் ஏறக்குறைய மூவாயிரத்துக்கும் அதிகமானவர்களை கொலை செய்தார்கள். பிடித்து வராமல் அந்த அந்த ஊர்களில் வைத்தே மூவாயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களைக் கொன்றார்கள். மேலும் இயக்க ஆதரவாளர்கள், ஐ.பி.கே.எப். இருந்த போது அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்று பொதுமக்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் வரை கொலை செய்தார்கள். ஐ.பி.கே.எப். வெளியேறிய 1990ஆம் ஆண்டில் தமிழ் இளைஞர்கள் மொத்தமாக ஒன்பததினாயிரம் பேர் வரை புலி விலங்குகளால் கொல்லப்பட்டார்கள். தமிழர்களைக் கொலை செய்வது புலிகளுக்கு பிறப்புரிமையாக்கப்பட்டது. 2009;ல் தமிழர்களை கூண்டோடு அழிப்பது சிங்கள இனத்துக்குப் பிறப்புரிமையாக்கப்பட்டது.


சனி, 10 ஏப்ரல், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……


நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 12)

(கிறேசியன், நாவாந்துறை)

ஒருவாரம் அந்தப்பக்கம் வராமல் இருந்தவர் பழையடி தனது கைவரிசையைக் காண்பித்துக் கொண்டுதான் இருந்தார். கே.டி.யின் சொந்த இடம் வட்டக்கச்சி, இவர் பலதரப்பட்ட ஒழுங்கீனங்களைச் செய்ததாகவும், புலி விலங்குகளின் கட்டுப்பாட்டையும் மீறி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, புலி இயக்கத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டதாகவும் அறிந்தேன்.


ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 10)

(கிறேசியன், நாவாந்துறை)

1987 ஆகஸ்ட் மாதத்தில் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான திரு. குமரப்பாவும், திரு. புலேந்திரனும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்குச் சென்று வரவேண்டும் என்று விண்ணப்பித்திருந்தனர் அமைதிப்படையிடம். தரைமார்க்கமாகச் செல்வதற்கு பாதுகாப்புகள் அப்போது இல்லை. எனவே வானூர்தியில் இவர்களை அழைத்துச் சென்றுவர ஐ.பி.கே.எப். ஏற்பாடு செய்தது.

திங்கள், 29 மார்ச், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்

நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 11)

(கிறேசியன், நாவாந்துறை)

சூனா. பானா. தமிழ்ச்செல்வன் அரசியல் தலைவராகி வெளிநாடுகளுக்குச் சென்று பல்லிளித்து வந்ததைத் தவிர வேறு ஏதும் செய்ததில்லை. அரசியல் என்றால் புன்னகைப்பதுதான் என்று இவர் கண்டுபிடித்திருந்தார் போலும். அன்று என்னைத் தாக்கும் போது அவரது முகத்தை நான் நேராகப் பார்த்தேன். மிகவும் கொடூரமானதும், அசிங்கமானதாகவும் இருந்தது. அங்கே இருந்த ஏனைய இயக்க அங்கத்தினருக்கும் புலி விலங்குகளுக்கும் தன்னை ஓர் பொல்லாத விலங்கு என்று காண்பிப்பதற்காக என்னை அப்படிப் பலமாக அடித்துத் துவைத்தார். என்னை அவருக்கு யார் என்றே தெரியாது. அன்றுதான் இந்தப் பகுதிக்கு வந்தவர். தன்னை ஓர் சூரப்புலியாகக் காண்பிக்க பிறரை வருத்தினார். எனது கையால் ஒரு அடிக்குத் தாங்கமாட்டார் அந்தப் பலிலிளிக்கும் விலங்கு. கைது செய்யப்பட்டிருக்கும் இயக்க அங்கத்தினரைப் பார்வையிட வந்தவராம் அன்று. தனது வீரத்தையும் காண்பிக்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவுதான் இது.


1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்

நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 10)

(கிறேசியன், நாவாந்துறை)

1987 ஆகஸ்ட் மாதத்தில் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான திரு. குமரப்பாவும், திரு. புலேந்திரனும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்குச் சென்று வரவேண்டும் என்று விண்ணப்பித்திருந்தனர் அமைதிப்படையிடம். தரைமார்க்கமாகச் செல்வதற்கு பாதுகாப்புகள் அப்போது இல்லை. எனவே வானூர்தியில் இவர்களை அழைத்துச் சென்றுவர ஐ.பி.கே.எப். ஏற்பாடு செய்தது. அதன்படி இந்த இருவரும் வானூர்தியில் மட்டக்களப்புக்குச் சென்றனர். அங்கே ஒருமணி நேரம் தங்கிவிட்டு மீண்டும் வான் ஊர்தியில் ஏறும்போது ஒரு பெண்ணை அழைத்து வந்து ஏற்றினர். இராணுவக் ஹெலிகொப்ரரில் பெண்களை ஏற்றக் கூடாது என்று சட்டம் உள்ளது. பைலட் ஏற்றுவதற்கு மறுத்தார். குமரப்பா முடியாது ஏற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தார். பைலட் ரேடியோவில் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டார். அவர்களும் பலருடன் ஆலோசித்துவிட்டு ஏற்றிக்கொண்டு வரும்படி பைலட்டுக்கு அனுமதி வழங்கினர்.


வியாழன், 25 மார்ச், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……



நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 8 &9}

(கிறேசியன், நாவாந்துறை)

நான் கிடங்கு இருக்கும் பகுதியை நோட்டம் விடுவதையே எனது கடமையாகச் செய்து வந்தேன். குழியில் இருப்பவர்களை காலையில் ஏணிகள் வைத்து வெளியில் வரச் சொல்வார்கள். அவர்கள் வெளியே வரும்போது கையில் சொப்பிங் பை ஒன்றினைக் கொண்டுவருவார்கள். கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டிருக்கும்.

புதன், 24 மார்ச், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……

நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 7)

(கிறேசியன், நாவாந்துறை)

எனக்கு மருந்து தடவிய அதே தயாபரன் மீண்டும் வின்டோஜனுடன் வந்தார். விசாரணை முடிந்ததும் இது வழக்கமாக நடைபெறும் சிகிச்சையாக இருந்ததால் அவரும் தமது கடமையை நிறைவேற்ற றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளருக்கும் எனக்கும் இடையில் வந்து அமர்ந்தார். குகன் அவர்களுக்கு மருந்து தடவ ஆரம்பித்தார். அவரும் வலி நிவாரணச் சொற்களான அம்மா, ஐயோ என்று முனகிக் கொண்டிருந்தார். புலி விலங்குகள் விலகிச் சென்று அவர்களுக்குள் ருசிகர கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்போது தயாபரன் அவர்களது வரலாறுபற்றி அறிந்துவிடலாம் என்ற ஆர்வம் மேலோங்கியது. “அண்ணே” என்று தயாபரன் அவர்களை அழைத்தேன். அவரும் திரும்பிப் பார்த்து என்னவென்று தலையை ஆட்டிக் கேட்டார். உங்களை எதற்காக இவையள் பிடித்துவந்திருக்கினம் என்று கேட்டேன்.

தயாபரன் தொடர்ந்தார் – தம்பி, எனது சொந்த ஊர் அரசடிவீதி, கட்டுடை, மானிப்பாய். நான் யாழ்ப்பாணம் பெரிய ஆசுப்பத்திரியில் வரவேற்புப் பிரிவில் வேலை செய்து வந்தேன். இயக்க உறுப்பினர்கள் யார் வந்தாலும் நான் முன்னின்று அவர்களுக்கு உதவி செய்வேன். முன்னர் புலிகள், ரெலோ, புளொட் என்று யார் வந்தாலும் விழுந்து விழுந்து உதவி செய்வேன்.

பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் பல பேரை அழைத்துவந்தனர் ஆசுபத்திரிக்கு அவர்களுக்கும் நான் உதவிகள் செய்தேன். ஐ.பி.கே.எப். (இந்திய இராணுவம்) வெளியேறியதும் புலிகள் வந்து என்னைப் பிடித்து வந்தனர். எதற்காக என்னைப் பிடித்து வந்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, “நீ எங்கட ஆக்கள ஈ.பி.க்கு காட்டி குடுத்து கொலை செய்திருக்கிறாய்” என்று பெட்டிசம் வந்திருக்கு. விசாரிச்சுப் போட்டு விடுறம் என்று கூறி இறுதியில் இந்த மரணக் குகைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

விசாரண முடிந்துவிட்டதா என்று கேட்டேன். எந்த விசாரணையும் நடைபெறவில்லை. காட்டிக் கொடுத்தாயா? கற்பழித்தாயா? கொள்ளையடித்தாயா? இவைதான் அவர்களது கேள்வி. என்னை பதினைந்து நாட்களுக்கும் மேலாக அடித்து சித்திரவதைச் செய்தனர். இங்கு வந்து செல்லும் புலிகள் அத்தனை பேரும் எனது உடலைப் பதம் பார்த்தவர்கள்தான். என்ன செய்வது தமிழனாக ஏனடா பிறந்தோம் என்று வருந்துவதைத் தவிர வேறு என்னத்தான் நினைப்பது என்று வருந்திச் சொன்னார்.

அதற்கிடையில் புலி விலங்குகளால் தாக்கப்பட்ட ஏனைய சகோதரர்கள் வலியினால் துடித்துக்கொண்டிருநதனர். அவர்கள் இவரை அழைத்தனர். அங்கு இருக்கும் அத்தனை பேருக்கும் இவர்தான் மருத்துவர். வின்ரோஜனில் சிறிது அளவு என்னிடத்தில் தந்து குகன் அவர்களுக்கு போடும்படி கூறிவிட்டு அவர் தனது கடமையைச் செய்ய அடுத்த சகோதரரிடத்துச் சென்றார்.

என்னிடமிருந்த வின்ரோஜனை குகன் அவர்களுக்கு தேய்த்தேன். விரல்களில் படாமல் உள்ளங்கையின் ஓரமாக கழிம்பை தேய்த்துவிட்டேன். அந்தக் கழிம்பு எனது கையில் படும்போது எனது வலிக்கும் மருந்தாக அமைந்தது. இரவு ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டு நித்திரையானோம்.

காலையில் கடன் கழிக்க வரிசையில் நின்றோம். அந்தவேளை அருகில் இருந்த கொடவுனிலிருந்தவர்களும் வரிசையாக காலை கடன் கழிக்க வந்திருந்தனர். இன்று குளிக்கும் தினம் என்று கூறிக்கொண்டார்கள்.

ஒன்றரை லிற்றர் கொள்ளளவு கொண்ட ரின் ஒன்றைக் கொடுத்தனர். காலைக் கடன் முடிந்து தண்ணீர் தொட்டிக்கு அருகில் வந்து வரிசையாக நிற்கும்படி கூறினர். 10 ரின் தண்ணீர் மட்டுமே எடுக்க வேண்டும். சவற்காரம் கிடையாது துடைக்க துவாய் கிடையாது, வெறும் தண்ணீரை தலையில் ஊற்றி கைகளினால் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஏற்கனவே உடல் அழுக்கேறி இருந்தது. தண்ணீர் ஊற்றியதால் ஈரமானதே தவிர அழுக்கு எதுவும் போகவில்லை. உடுத்தியிருந்த சரத்துடன் குளித்தேன். அனைவரும் அப்படித்தான் குளித்தார்கள். யாருக்கும் சவற்காரம் கிடையாது. குளித்து முடிந்ததும் சரத்தைக் கழற்றி பிழிந்து உதறிவிட்டு மீண்டும் உடுத்திக் கொண்டேன்.

இந்த வேளை அருகிலிருந்த கொட்டகைக்கு மேற்குப் புறத்தில் பல இடங்களில் குழிகள் வெட்டப்பட்டு அதன் மேல் நீலநிற பொலித்தீன் கொண்டு பந்தல் போல் அமைக்கப் பட்டிருந்தது. இடையிடையே பெரிய கிடங்குகளும் தென்பட்டன. ஏறக்குறைய 50அடி நீளம் 50அடி அகலம் 15 அடி ஆழம் வரையிலும் சில கிடங்குகள் இருந்தன. அவற்றிலிருந்து ஏணிகள் மூலம் விலங்குகள் இட்டு கழிப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தனர்.

இது என்ன கொடுமை, நாங்கள்தான் கொடுமையில் உளல்கிறோம் என்றால் இவர்கள் படும் கொடுமை எங்களையும் விட அதிகமாக இருக்கும் போல் தோன்றிற்று. அந்தச் சகோதரர்கள் யாராக இருக்கும் என்று அறிய எனது மனம் அலைபாய்ந்தது. யாரிடத்துக் கேட்கலாம் என்று யோசிக்கும் வேளை, நடவுங்கள் கொடோனுக்கு என்றனர். மெதுவாக நடந்து இருப்பிடம் அடைந்தேன் குகன் அண்ணனும் அப்பையா அண்ணனும் குளித்துவிட்டு அதே ஈரச் சரத்துடன் வந்து அமர்ந்தனர்.

11மணியளவில் அரை றாத்தல் பாண் தரப்பட்டது பருப்புடன். இந்தச் சமையலைச் செய்வதும் எமது சகோதரர்கள் தான். இரண்டு வகையான சமையல் செய்யப்படும். கைதிகளுக்கு என்று தரக்குறைந்த சமையல், புலிகளுக்கென்று தனி மாமிச உணவு, இவற்றை சமைப்பது கைதிகள்தான். அவர்களுக்கான கால்விலங்கு ஏனையோரை விட அரையடி அதிகமாக விட்டு வெல்டிங் செய்யப்பட்டிருந்தது. புலி விலங்குகளுக்கு சமைக்கும் போது புலியின் நபர்கள் கதிரைகள் மீது இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்களென்று விபரம் கூறினார் அப்பையா அண்ணன்.

நான் இப்போது அங்கு இருக்கும் சகோதரர்களைப் பார்த்துப் புன்னகைக்க ஆரம்பித்தேன். சிலர் என்னைப் பார்த்து புன்னகைத்தனர். இந்தப் புன்னகைகள் மனதளவில் கிடையாது. உதட்டளவில் பதிலுக்கு ஆமோதிப்பது போன்று இருந்தது அவர்கள் புன்னகை. ஏனெனில் இவர்கள் அனைவரது இதயங்களும் அவர்களது கைகளில் இல்லை. புலி என்ற விலங்குகளின் கைகளில் அவர்களது உயிரும் உடலும் இருந்தன!

எனக்கு நேர் முன்வரிசையில் அமர்ந்திருந்தவரது பெயர் பிரசாந்த். இவர் றெலோ இயக்கத்தைச் சேர்ந்தவர். கிளிநொச்சி மாவட்டத்தின் ரெலோ இயக்க அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக இருந்தவர். இவரது காலில் தொடர்ந்து புண் இருந்து கொண்டே இருந்தது. கால்களில் கட்டைகளால் அடிக்கும் போது இரத்தக் கண்டல் ஏற்பட்டு புண்ணாகியிருந்தது. அதன் மேல் கால்விலங்கும் போடப்பட்டு வெல்டிங் செய்திருந்தபடியால், அந்த விலங்கு தொடர்ந்து அந்தப் புண்களில் உரசிக் கொண்டே இருந்தது. இதனால் இருப்பதும் எழுந்து நடப்பதும் அவருக்கு ஓர் தண்டனையாகவே இருந்தது. 

இருந்தாலும் அவர் மனவுறுதியுள்ளவராக இருந்தார். இவர்களால் (புலிகளால்) என்னை சித்திரவதைச் செய்துக் கொல்லத்தான் முடியும், நாங்கள் அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். இறந்த பின் நாம் எங்கே போகிறோமோ அங்கேதான் இந்தப் புலிகளும் பின்னாளில் வரவேண்டும். அங்கே நான் அப்போ சீனியராக இருப்பேன் என்று எனக்கு விளக்கமளித்தார் பிரசாந் அவர்கள். எனக்கும் இவரது கூற்றுச் சரியாகத்தான் பட்டது. ஏன் பயந்து பயந்து வாழ வேண்டும், இவர் (பிரசாந்த்) சாகும் போது நானும் சேர்ந்து செத்தால் போகிற இடத்தில் சீனியராக இருக்கலாம், இந்த விலங்குகள் அங்கு ஒரு நாள் வரத்தானே வேண்டும் என்று நானும் சிந்திக்கலானேன்!

எனக்கு அருகில் இருக்கும் றொலெக்ஸ் உரிமையாளர் அவ்வளவாக கதைக்க மாட்டார். கேள்வி கேட்டால் மட்டுமே பதில் சொல்வார். அந்தப் பதிலும் இரண்டொரு வார்த்தைகளில் முடிந்துவிடும். மறுபுறத்தில் இருக்கும் அப்பையா அண்ணன் கதைக்கக் கூடியவர், புலி விலங்குகளுக்குப் பயந்து தலையைக் கீழே நோக்கிக் கொண்டுதான் கதைப்பார். அதனால் அவர் சொல்வது பாதி அளவுதான் விளங்கும்.

எனக்கோ அந்தக் கிடங்குகளில் இருக்கும் சகோதரர்களை யார் என்று அறிய வேண்டும் என்ற ஆவல் மிகுதியாக இருந்தது. எனக்குத் தெரிந்த யாராவது இருப்பார்களோ என்ற அச்சமும் இருந்தது. தனித் தனிக் குழிகளும் இருந்தன, பெருங் குழிகளும் இருந்தன. நாளைக்கு எப்படியாவது இதன் இரகசியத்தை அறிந்து விட வேண்டும் என்று தீர்மானித்தேன்.

நான் இருக்கும் மண்டபத்தின் மேற்குப் பகுதிக்குச் சென்றால், அதிலிருந்து முப்பது நாற்பது அடி தூரத்தில்தான் அந்தக் குழிகள் ஆரம்பித்தன. எப்படியாவது மேற்கு நோக்கி நகர வேண்டும். மறுநாள் நாள் நான் எதிர்பார்த்த மேற்கு நோக்கிய பயணம் தானாகவே நடந்தது. ஆம், புலி விலங்குகள் இங்கு இருப்பவர்களை தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பதற்கு விடுவதில்லையாம். ஒரே இடத்தில் இருந்தால் ஒருவருக்கு ஒருவர் பழக்கம் ஏற்பட்டு ஏதாவது திட்டங்கள் போட்டுச் செயற்படுத்த வாய்ப்பு உண்டு என்று யோசனை செய்து ஒரு முனையில் இருப்பவரை மறுமுனைக்கும் வடக்கில் இருப்பவர் கிழக்குக்கும் என்று தலைகீழ் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினர் அந்தப் புலி விலங்குகள்.

நான் எதிர்பார்த்திருந்த மேற்கு மூலைக்குச் சென்று ஒரு சதுரக் கோட்டின் நடுவில் நின்றுகொண்டேன். ஒவ்வொருவரும் அவ்விதம் நின்று கொண்டதும் சத்தம் போடாமல் இருக்கும் படி கூறினர். கடந்த இரவு கூட எம்மவரில் ஏழு பேரது இலக்கங்களையும் பெயர்களைக் கூறி அழைத்துச் சென்றனர். அப்படி அழைத்துச் செல்பவர்கள் மீண்டும் இந்தக் கொட்டகைக்குத் திரும்பி வருவது கிடையாது. இங்கு காவலுக்கு நிற்கும் புலி விலங்குகளும் மனிதப் பண்புகளைக் கொண்ட வார்த்தைகளைக் கதைப்பது கிடையாது. யாரை என்றாலும் வாடா, போடா என்று தூஷண வார்த்தைகளைத்தான் பயன்படுத்துவர். இவர்களில் ஒருவர் மட்டுமே தூசண வார்த்தைகள் பேசவில்லை. அவர் சலீம் என்ற சேர்லி அம்மான் ஆவார். இவர்தான் இந்தச் சிறைக்கு பொறுப்பானவர். இவர் பின்னாளில் புலிவிலங்குகளை விட்டு விலகி தனது சொந்தக் குடும்பத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டதாக அறிந்தேன்.

நான் கிடங்கு இருக்கும் பகுதியை நோட்டம் விடுவதையே எனது கடமையாகச் செய்து வந்தேன்.

(தொடரும்…)

ஞாயிறு, 21 மார்ச், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……



நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 6)

(கிறேசியன், நாவாந்துறை)

மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞரைக் காட்டி அவர் யார் என்று கேட்டேன்? அவர்தான் ஈ.பி.ஆர்.எல்.எப். யாழ் மாவட்டப் பொறுப்பாளர் தோழர். முகுந்தன் என்றார். அவர் பட்டிருக்கும் சித்திரவதையை ஒப்பிடும் போது நாம் பட்டவை சாதாரணமாகத்தான் தெரிந்தது எனக்கு. அவரிடமும் ஏதோ விசாரித்துவிட்டு தனியாக அமரவைத்தனர்.


திங்கள், 15 மார்ச், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……

ஞாயிறு, 14 மார்ச், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……

நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 4)

(கிறேசியன், நாவாந்துறை)

அவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன்! நான்தான் யாழ்ப்பாணம் றொலெக்ஸ் ஹொட்டல் ஓணர் என்றார். எனக்கு றொலெக்ஸ் ஹொட்டலைத் தெரியும்,

வியாழன், 11 மார்ச், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……



நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 3)

வவுனிக்குளம் சிவபுரத்திலிருந்து புறப்பட்ட லொறி இரவு 20 நிமிடங்கள் வரை பயணித்து ஓர் இடத்தில நிறுத்தப்பட்டது. எங்களை இறங்கும்படி பணித்தனர் அட்டைகள். இறங்கினோம். கட்டப்பட்ட கண்கள் கழற்றப்பட்டன. எங்கும் வெளிச்சமாக இருந்தது. இந்த இடம் துணுக்காய் என்றனர், அட்டைகள் நடத்திவரும் வதைமுகாம் இதுதான் என்றனர் என்னுடன் விலங்கிடப்பட்டிருந்தவர்கள். இறங்கிய எங்களை ஓர் பழைய அரிசி மில் ஒன்றினுள் அழைத்துச் சென்றனர். அங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தரையில் படுத்திருந்தனர். அவர்களது கால்களில் சங்கிலிகள் மாட்டப்பட்டிருந்தன. இருவர் ஒரு சங்கிலியில் மாட்டப்பட்டிருந்தனர். எங்களது கால் சங்கிலியை கழற்றினர். இருவர் இருவராக நிற்கச் சொல்லி ஒரு சங்கிலியில் இருவரை இணைத்தனர். பின்னர் இவர்களுடன் படுத்துக்கொள்ளும்படி கூறினர். நாளை வருகிறோம் என்று கூறிச் சென்றனர்.