வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மனோ கணேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனோ கணேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

கொழும்பில் யார் அதிகமாக வாழ்கின்றனர்?: சம்பிக்கவுக்கு மனோவின் பதிலடி



கொழும்பு நகரில் சிங்களவர்களை விட தமிழர்கள் அதிகமாக வாழ்வதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும். கொழும்பு நகரில் 204,520 சிங்களவர்களும், 176,198 தமிழர்களும் வாழ்கிறார்கள்.

செவ்வாய், 15 ஜனவரி, 2013

சிறிதரன் எம்.பி, உதயன் பத்திரிகை மீதான அழுத்தங்களை தமிழ் கட்சிகளும், ஊடகங்களும் காத்திரமாக கண்டிக்க வேண்டும்: மனோ கணேசன்


உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னாலும் பலதடவை இந்த பத்திரிக்கை நிறுவனம் தாக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகம் முற்றுக்கையிடப்பட்டு அங்கிருந்து வெடிமருந்து கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னாலேயே, அலுவலக பாதுகாவல் நீக்கம், பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை போன்ற பல்வேறு அழுத்தம் தரும் செயல்பாடுகள் சிறிதரன் எம்.பி. மீது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் ஏதேச்சதிகார நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக ஜனநாயக அரசியல் ரீதியாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடக சுதந்திரத்தின் அடிப்படையிலும் செயல்படும் தமிழ் தேசிய சக்திகளை தனிமைபடுத்தி முறியடிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் செய்யப்படுவதை தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் ஊடகங்களும், தமிழ் மக்களும் புரிந்துகொள்ளவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதன், 9 ஜனவரி, 2013

ஆடு மாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கியவர் மனிதனுக்கு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டார்: மனோ


மு ன்னேஸ்வரத்துக்கு சென்று நான்கு கால்கள் உள்ள ஆடு மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய நபர், அவருடை பகுதியான களனியில் வாழும் இரு கால்களுடைய மனித பிறவிக்கு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டார். இவ்வாறான செயற்பாடுகளை எண்ணுகின்ற போது வெட்கமாக இருக்கின்ற அதேவேளை வேதனையும் ஏற்படுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

'குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார் பான் கீ மூன்'


40,000க்கும் மேற்பட்ட பெருந்தொகை அப்பாவிப் பொதுமக்களை பலி கொடுத்துதான் இன்னொரு பெருந்தொகையினரை காணாமல் போகச்செய்துதான், இலங்கை அரசாங்கம் புலிகள் இயக்கத்தை ஒழித்தது என்ற உண்மையும், இது தொடர்பில் ஐ.நா காத்திரமாக செயற்படாமல் பொறுப்புகளிலிருந்து தவறிவிட்டது என்ற உண்மையும், சார்ல்ஸ் பெற்றி குழுவினர் ஆய்வு செய்து ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கையின் மூலமாக பகிரங்கமாகியுள்ளது.

புதன், 5 செப்டம்பர், 2012

சேவல், வீட்டு சின்னத்திற்கு வாக்களித்து தமிழர்கள் தமது இனரீதியான இருப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் : மனோ



ரத்தினபுரி-கேகாலை ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்ற தமிழர்கள் சேவல் சின்னத்திற்கும், மட்டக்களப்பு-திருகோணமலை-அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்ற தமிழர்கள் வீட்டு சின்னத்திற்கும் வாக்களித்து, நமது இனரீதியான இருப்புகளை உறுதி செய்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் அழைப்பாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதன், 22 ஆகஸ்ட், 2012

'அளவுக்கு அதிகமான இராணுவ பிரசன்னமே, பிரிட்டனின் பயண எச்சரிக்கைக்கு அடிப்படை காரணம்'



ட மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக இராணுவத்தை அரசாங்கம் குவித்து வைத்துள்ளது. புலிகள் மீண்டும் தலை எடுக்க போகிறார்கள் என்று கூறி, அதை தடுப்பதற்கே இந்த பாதுகாப்பு நடவடிக்கை என்று அரசாங்கம் இதை நியாயப்படுத்துகின்றது. பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கலாம் என்று அரசாங்கமே அதிகாரப்பூர்வமாக சொல்வதால்தான், இன்று பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதன், 8 ஆகஸ்ட், 2012

கோமா நிலையிலிருந்த தமிழ் கைதி டில்ருக்ஷன் மரியதாஸ் உயிரிழந்தார்


வுனியா சிறைச்சாலை அசம்பாவிதத்தின்போது தாக்கப்பட்டு கோமா நிலையில் வைத்தியசாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்ஷன் மரியதாஸ் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் சிவில் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வியாழன், 3 மே, 2012

புலிக்கொடியை வைத்து அரசியல் செய்கிறது அரசாங்கம்: மனோ கணேசன்



வி
டுதலை புலிகளை அழித்துவிட்டோம் என்று சொல்லி அவர்களை இன்னமும் திட்டி தீர்க்கும் இந்த அரசாங்கம், இன்று புலிக்கொடியை வைத்து அரசியல் செய்யும் வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

ஹெல உறுமய இனவாத பிரிவினைவாத கட்சி:மனோ _



ந்நாட்டில் இன்று இனவாதத்தையும், பிரிவினைவாததையும் முன்னெடுக்கும் கட்சி ஜாதிக ஹெல உறுமய ஆகும். தம்புள்ளை பள்ளி உடைப்பு தொடக்கம் நாட்டில் இன்று முன்னெடுக்கப்படும் அனைத்து இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ மதஸ்தலங்கள் உடைப்பு சம்பவங்களையும் இவர்கள் நியாயப்படுத்துகிறார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

புதன், 1 பிப்ரவரி, 2012

ஒரு போதும் தர விரும்பாததைப் பற்றி பேசி காலத்தை ஓட்டுகிறது அரசாங்கம் - மனோ குற்றச்சாட்டு


13 ஆம் திருத்தத்தின் கீழ் இருப்பதைக்கூட தராமல் கடும் போக்கில் இருக்கின்ற இந்த அரசாங்கம், தான் ஒரு போதும் தர விரும்பாத 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் என்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்து காலத்தை ஓட்டுகிறது. கிருஷ்ணாவுடன் தான் 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் என்பதற்கு உடன் படவில்லை என்று ஜனாதிபதி இன்று சொல்கிறார். அப்படியானால் இந்திய வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பும் முன் சொல்லிச் சென்றது பொய்யா? இன்று மீண்டும் சர்வ கட்சிக் கதையை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்துள்ளார். அப்படியானால் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பிப் போக வேண்டுமா? இந்தப் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அடிப்படையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும்? வண. மதுலுவாவே சோபித்த தேரர் தலைமையில் கொழும்பு ஜயவர்தன நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற சமூக நீதிக்கான தேசிய இயக்கக் கூட்டத்தில் சிங்கள மொழியில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் மேற்கண்ட கேள்விகளை எழுப்பினார்.

சனி, 12 ஜூன், 2010

ரவி கருணாநாயக்கவின் கருத்துக்கள் முட்டாள்தனமானவை- மனோ கணேசன்

இந்திய அரசு இலங்கையில் உள்ள சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை ஐக்கிய தேசிய கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிர்ப்பது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையா என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்,

திங்கள், 3 மே, 2010

வாக்களிக்கும் ஜனநாயக உரிமை குறித்து தமிழ் மக்கள் அக்கறை செலுத்த வேண்டும் :மனோ கணேசன்


தமிழ் மக்கள் அரசியல் வாதிகளைக் குற்றம் சுமத்துவதைவிட தாம் தமது ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையைச் சரியாக பயன்படுத்தியுள்ளோமா என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

வியாழன், 26 நவம்பர், 2009

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்று அறிவிப்போம்:மனோ கணேசன்


ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு குறித்தும் யாரை ஆதரிப்பது என்பது பற்றியும் இன்று வியாழக்கிழமை அறிவிப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் குறித்த பல்வேறு சர்ச்சைகள் தற்போது எழுந்தவண்ணமுள்ளன. இந்நிலையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய அரசியல் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் தலைமையத்தில் நடைபெறவுள்ளது.

கட்சியின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தீர்க்கமான முடிவினை எடுக்கவேண்டிய சந்தர்ப்பம் இதுவென்றும் மத்திய அரசியல் குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக கலந்துரையாடப்பட்டு முடிவினை அறிவிக்கவுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்