மு ன்னேஸ்வரத்துக்கு சென்று நான்கு கால்கள் உள்ள ஆடு மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய நபர், அவருடை பகுதியான களனியில் வாழும் இரு கால்களுடைய மனித பிறவிக்கு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டார். இவ்வாறான செயற்பாடுகளை எண்ணுகின்ற போது வெட்கமாக இருக்கின்ற அதேவேளை வேதனையும் ஏற்படுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
முன்னாள் கொழும்பு மாநகரசபை பிரதி மேயர் அசாத்சாலியின் காரியாலயத்தில், அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மனோ கணேசன் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களனி பிரதேச சபை உறுப்பினரான ஹசித்த மடவல கொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு கால்கள் கொண்ட ஆடு மாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கியவர் ஹசித்த மடவலவுக்கு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டார். இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இப்பகுதிகளில் அறங்கேரி வருகின்றன. இவ்வாறான விடயங்களை எண்ணி பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது என்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’