டுதலை புலிகளை அழித்துவிட்டோம் என்று சொல்லி அவர்களை இன்னமும் திட்டி தீர்க்கும் இந்த அரசாங்கம், இன்று புலிக்கொடியை வைத்து அரசியல் செய்யும் வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சிங்கள மக்களிடம் தமது செல்வாக்கை தக்க வைத்துகொள்ள இவர்களுக்கு புலி மற்றும் புலிக்கொடி என்ற வார்த்தைகளை தவிர வேறு எதுவும் எஞ்சி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது" என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். யாழ்பாணத்தில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டணியின் தேசிய மே தின ஊர்வலத்தில் புலிக்கொடி காட்டப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மனோ கணேசன், "தேசிய கொடியை சிங்கள மக்கள் சிங்க கொடி என்று தான் பரவலாக கூறுகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், இந்த சிங்க கொடி என்ற தேசிய கொடியை கையில் எடுத்தது கூட இந்த அரசாங்கத்திற்கு ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக தெரியவில்லை. அந்த அளவுக்கு தமது சொந்த அரசியல் நோக்கங்கள் இவர்களது கண்களை திரையிட்டு மூடியுள்ளன. வடக்கில் நிகழ்ந்து முடிந்த மே தின நிகழ்வில் தேசிய ஒற்றுமை, தேசிய ஐக்கியம் என்பவை பற்றி தான் அதிகம் பேசப்பட்டன. உண்மையான தேசிய ஐக்கியத்திற்கு அடிப்படையாக தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் பிரித்து வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து, தேசிய ஒற்றுமை கருத்துகளுக்கு இணையாக பேசப்படவில்லை. இது தற்செயலாக நிகழ்ந்துவிட்ட யதார்த்தம். இவை அனைத்திற்கும் சிகரமாக, பிரிபடாத இலங்கைக்குள் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பின் அடையாளமாக, கூட்டமைப்பின் தலைவர் தேசிய சிங்க கொடியை கையில் ஏந்தினார். இதன்மூலம் சிங்கள மக்களுக்கு அவர் ஒரு செய்தியை வெளிப்படுத்தினார் என நான் நம்புகின்றேன். ஆனால் இத்தனை அரசியல் நாகரீகத்துடன் கூடிய நல்லெண்ண அடையாளங்களுக்கு பிறகும் இந்த அரசாங்கம் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டுள்ளது. எதிர்கட்சிகளின் ஊர்வலத்தில் புலிக்கொடி என்ற கதை, அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி என்பது சிறு குழந்தைக்கு கூட விளங்குகின்றது. ஊர்வலத்தில் புலிக்கொடி இருப்பதாக உடனடியாக அரச தொலைகாட்சியில் காட்டப்பட்டது. அதாவது இன்று நாட்டில் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ள புலிகளின் கொடியை பிடிப்பவரை கண்டால், ஆளை பிடிப்பதை விட்டு விட்டு அந்த காட்சியை அரச தொலைக்காட்சிகாரர்கள் படம் பிடித்துள்ளார்கள். இதன் பின்னணியை புரிந்து கொள்வது கஷ்டமானதல்ல. இந்த அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் தலைமைகள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை இந்த நிகழ்வுகள் அறிவுறுத்துகின்றன" என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’