வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 மே, 2012

பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க அரசாங்கத்தை முஸ்லிம் காங்கிரஸ் தூண்ட வேண்டும்: த.தே.கூ.



ற்போது நின்றுபோயுள்ள அரசியல் பேச்சுக்களை மீண்டும் தொடங்கும் நோக்கில் மத்தியஸ்தம் செய்ய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்துள்ள நிலையில், அரசாங்கம் அமைக்கவுள்ள நாடாளுமன்றக் குழுவில் சேரும்படி தம்மை வலியுறுத்துவதை விடுத்து தம்முடனான இருபக்க பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு அரசாங்கத்தை தூண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ பிரேமச்சந்திரன்,
தெரிவுக்குழுவில் சேரும்படி எம்மிடம் பேசுவதற்குப் பதிலாக அரசியல் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்க வேண்டுமென கூறினார். 'இவரால் இது முடியுமா என எனக்கு தெரியவில்லை' என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன். அரசாங்கம் முதலில் தம்முடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்காவிட்டால் தாம் தெரிவுக்குழுவுக்கு அங்கத்தவர்களை நியமிக்கத் தயாரில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. தொடர்புடைய சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்கு தெரிவுக்குழுவின் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுவது அவசியம் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என சபை முதல்வாரன அமைச்சர் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’