வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 மே, 2012

வாழ்வெழுச்சி தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கான கண்காட்சியை திருமலையில் நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல்



வா
ழ்வெழுச்சி தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கான கண்காட்சியை திருகோணமலை மாவட்டத்தில் நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இக்கலந்துரையாடல் இன்றைய தினம் (2) இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிர்வரும் ஜலை மாதம் 7ம் 8ம் திகதிகளில் திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் இரண்டு நாட்களைக் கொண்டதாக இக்கண்காட்சி அமையப் பெறவுள்ளது. இக்கண்காட்சி தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி விளக்கவுரையாற்றும் போது சிறிய மற்றும் நடுத்தர குடிசைக் கைத்தொழில்களை நவீன முறையில் மேலும் விருத்தி செய்து அதனூடாக அதுசார்ந்த குடும்பங்களினது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் இக்கண்காட்சி முன்னெடுக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்கனவே வாழ்வெழுச்சி தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 13 மாவட்டங்களில் கண்காட்சிகள் நடாத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இக்கண்காட்சி இடம்பெற்றுள்ள நிலையில் இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் ஜூலை மாதம் திருகோணமலை மாவட்டத்திலும் நடைபெறவுள்ளது. பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து மேலும் நான்கு அமைச்சுக்கள் இவ்வாழ்வெழுச்சித் திட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களும் இக்கண்காட்சியில் முக்கிய பங்கை வகித்து வருகின்றன. இதன்போது 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை தாம் எதிர்பார்ப்பதாகவும் அதன்பொருட்டு இம்மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலகங்களும் அதுசார்ந்த உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். இக்கண்காட்சிக்காக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு 1.5 மில்லியன் ரூபாவையும் திருகோணமலை மாவட்ட அரச செயலகம் 1 மில்லியன் ரூபாவையும் வழங்கவுள்ளதாகவும் மக்களின் போக்குவரத்தை கருத்திற் கொண்டு இலவச பேரூந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் நிலைத்து நிற்கக் கூடிய குடிசைக் கைத்தொழில்களை உருவாக்குதல் என்ற மகுடத்தின் கீழ் வாழ்வெழுச்சி திட்ட கண்காட்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே நடாத்தப்பட்ட இவ்வாறான கண்காட்சிகள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருவதாகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பகுதிக்கு இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவித்தார். வாழ்வெழுச்சி தொடர்பான வழிகாட்டல் கருத்துரையினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி பிரிவின் பணிப்பாளர் கமகே விளக்கினார். இதில் மாவட்ட அரச அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வா மேலதிக அரச அதிபர் அருள்ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’