வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 மே, 2012

தகவலறியும் சட்டமூலத்தை மீண்டும் சமர்ப்பிக்க கரு ஜயசூரிய தீர்மானம்



கவலறியும் உரிமைச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார். உலக ஊடக சுதந்திர தினத்தையொட்டி இன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கரு ஜயசூரிய இதனைத் தெரிவித்தார்.
ஏனைய நாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்களின் தன்மைகளைக் கொண்ட புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் தான் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் கூறினார். அதனால், கடந்த தடவை போன்று தனது முயற்சியை தோற்கடிக்காமல் இம்முறை தனக்கு ஆதரவு வழங்குமாறு அரசாங்கத்தை கரு ஜயசூரிய கோரினார். 'பொதுப்பணத்தை அரசாங்கம் பொறுப்புடன் செலவிட்டால் இந்த சட்டமூலம் கூறித்து அரசாங்கம் அஞ்சத் தேவையில்லை' என கரு ஜயசூரிய கூறினார். அரசாங்கம் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளில் இதுவும் ஒன்றாகும் என அவர் தெரிவித்தார். 'அரசாங்கம் தனது சொந்தக் குழந்தை குறித்தே அஞ்சுகிறது' என அவர் கூறினார். தமது வரிப்பணத்திற்கு என்ன நடக்கிறது என மக்கள் அறிந்துகொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தகவலறியும் சட்டமூலத்தை நிறைவேற்றினால் சர்வதேச அரங்கில் சாதகமான நிலையை பெறும் என அவர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’