வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 மே, 2012

அரசுக்கும் த.தே.கூட்டமைப்புக்கும் இடையில் எவரும் தேவையில்லை: சுமந்திரன் எம்.பி



ரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணைப்பாளராக செயற்படுமாறு சுஷ்மா ஸ்வராஜ் ரவூப் ஹக்கீமுக்கு விடுத்த வேண்டுகோள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதுவும் தெரியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
'ஊடகங்களில் மாத்திரமே நாங்கள் இதனைப் பார்த்துள்ளோம். இது தொடர்பில் எவரும் உத்தியோகபூர்வமாகவோ அல்லது உத்தியோகபூர்வம் அற்ற முறையிலோ தெரிவிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கும் இடையில் சுமுகமானதொரு உறவு நிலவிவரும் நிலையில் அரசியல் விடயங்கள் தொடர்பிலேயே அவ்வப்போது விவாதிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஹக்கீம் சந்திப்பது ஒன்றும் புதிய விடயம் இல்லை' எனவும் அவர் கூறினார். அவசியம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளுமென எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார். இடையில் எவரும் இதற்கு தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’