வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மார்ச், 2011

அனைவருக்கும் நானே ஜனாதிபதி அபிவிருத்திக்கு வாக்களியுங்கள்: மன்னாரில் ஜனாதிபதி மஹிந்த

ள்ளுராட்சித் தேர்தலில் அரசாங்கத்துக்க எதிராக வாக்களிக்குமாறு சிலர் கூறுகின்றனர். நாட்டின் அபிவிருத்தி நலனை கருத்திற் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்தெரிவித்தார்.

செவ்வாய், 8 ஜூன், 2010

ஜனாதிபதி சற்றுமுன்னர் இந்தியா பயணமானார்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இந்தியா பயணமாகியதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

வியாழன், 3 ஜூன், 2010

' சொந்தப் பணத்தில் வெளிநாடு செல்லுங்கள் ' : ஜனாதிபதி அதிரடி பணிப்புரை

பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என மாகாண,பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

நாடு திரும்பினார் ஜனாதிபதி _

பூட்டானின் திம்பு நகரில் நடைபெற்ற 16 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த ஜனாதிபதி, இன்று நண்பகல் 12:00 மணியளவில் நாடு திரும்பினார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

அமிதாப் - ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரபல ஹிந்தி நடிகர் அபிதாப்பச்சன் இன்று மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்.

திங்கள், 19 ஏப்ரல், 2010

நாட்டு மக்களுக்கு கடமையை நிறைவேற்றும் காலம் வந்துள்ளது:ஜனாதிபதி

நாட்டு மக்களுக்கு கடமையை நிறைவேற்றும் காலம் வந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நடைபெற்று முடிந்த 7 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் ஐ.ம.சு.மு வில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

புதன், 14 ஏப்ரல், 2010

மக்களை ஐக்கியப்படுத்தும் வகையில் புதுவருடப் பண்டிகை அமைய வேண்டும் புத்தாண்டுச் செய்தியில் ஜனாதிபதி



தாய்நாடு ஐக்கியப்படுத் தப்பட்ட பின்னர் இணக்கமான மற்றும் திருப்தி யான நிலையில் கொண்டாடப்படும் முதலாவது புது வருடம் இதுவாகும். இது போன்ற புதுவரு டப் பண்டிகைகள் எமது மக்களை இதயத் தாலும், மனதாலும் மேலும் ஐக்கியப்படுத் தும் வகையில் அமையவேண்டும் என்பது எனது பெருவிருப்பமாகும்.

திங்கள், 5 ஏப்ரல், 2010

2ஆவது இராணுவ நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் குழு ஜனாதிபதியினால் நியமனம்

Loogix.com. Animated avatars. இராணுவ சட்டத்துக்கு முரணான வகையிலும் உரிய ஆலோசனைகளுக்கு செவிமடுக்காமலும் பல்வேறு கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணை செய்வதற்காக நிறுவப்பட்டுள்ள இரண்டாவது இராணுவ நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 29 மார்ச், 2010

பொதுக்கூட்டங்களின் போது எதிர்க்கட்சிகளுக்கு சேறு பூசும் வகையில் உரையாற்றக் கூடாது : ஜனாதிபதி

பொதுக்கூட்டங்களின் போது எதிர்க்கட்சிகளுக்கு சேறு பூசும் வகையில் உரையாற்றுவதை தவிர்க்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சகல மாவட்டத் தலைவர்களின் ஊடாக வேட்பாளர்களுக்கு, ஜனாதிபதி இந்த உத்தரவினை அனுப்பி வைத்துள்ளார்.

செவ்வாய், 16 மார்ச், 2010

எந்தவொரு அழுத்ததிற்கும் அடிபணியாது நாட்டை முன்னேற்றுவோம். - ஜனாதிபதி சூழுரை


எந்தவொரு அழுத்தங்களுக்கும் கீழ்படியாது ஒரே நாட்டுமக்களாக பலம்வாய்ந்த நிலையில் அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 12 மார்ச், 2010

சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சரத்தில் புனரமைப்புப் பணிகள்


மஹா சிவராத்திரியை முன்னிட்டு பாடல்பெற்ற திருக்கேதீச்சர ஆலயத்தின் புனர் நிர்மாணப் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.புனித நீராடும் பாலாவித் தீர்த்தமும் புனரமைக்கப்படுவதோடு அதன் சுற்றுப்புற பாதைகள் கற்களினால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

புதன், 24 பிப்ரவரி, 2010

உரிய காலத்தில் அபிவிருத்தி திட்டமின்றி 40 வருட பலனை நாடு இழந்து நிற்கிறது : ஜனாதிபதி


நாட்டுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தத் தவறியதால் நாடு 40 வருட கால பலனை இழந்து நிற்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

"அபிவிருத்தியாகட்டும், யுத்தமாகட்டும் நாம் போதிய நிதியைக் கையில் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கவில்லை. உள்ளதை வைத்தே தொடங்கினோம். மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டத்தை 500 மில்லியன் ரூபாவை வைத்தே ஆரம்பித்தோம். எனினும் இதுவரை 6000 மில்லியன் ரூபா நிதியைச் செலவு செய்துள்ளோம்" என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி நேற்று அங்கு விஜயம் செய்ததுடன் மொரகஹகந்த பாலம் உட்பட பல மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதற்கான விசேட நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, எஸ். எம். சந்திரசேன, ரோஹண திசாநாயக்க உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :

"1990 ஆம் ஆண்டிலிருந்து நீர்ப்பாசனத்துறைக்கென முன்பிருந்த அரசு உரிய திட்டங்களை மேற்கொள்ளவில்லை. அதனால் விவசாயிகள் நம்பிக்கையிழந்து அத்துறையைவிட்டு விலகிச் சென்ற யுகமே தொடர்ந்தது. எம்மால் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களுக்காக வெளிநாடுகளை நம்பியிருக்க நேர்ந்தது.

'உமா ஓய' திட்டம் இருபது வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்திருக்க வேண்டியது. அதேபோன்று மகாவலித் திட்டம் கூட டட்லி சேனநாயக்கவின் காலத்தில் அவர் ஆரம்பித்தது என்பதை மறக்கக்கூடாது.

500 மில்லியன் ரூபாவை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கி ஆரம்பித்த மொரகஹகந்த திட்டம் தற்போது 6,000 கோடி ரூபா செலவில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் அரசாங்கத்துக்கு வழங்கிய நிதியில் தேசிய வருமானத்தைக் கொண்டே நாம் இதன் முதற்கட்டப் பணிகளைப் பூர்த்தி செய்துள்ளோம்.

308 மில்லியன் ரூபா செலவில் பால நிர்மாணம்

இன்று புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்ட மொரகஹகந்த பாலம் 308 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை எமது நாட்டு பொறியியலாளர்களே நிர்மாணித்துள்ளனர்.

இந்த கங்கையிலிருந்து 726 மில்லியன் லீற்றர் தண்ணீர் தினமும் கடலில் சேர்வதை நாம் தடுத்துள்ளோம். பராக்கிரமபாகு மன்னனின் கூற்றுப்படி ஒரு துளி நீரையும் கடலில் சேர நாம் இடமளிக்கக் கூடாது.

இத்திட்டத்திற்கான பாதைகளை நிர்மாணிக்கும் போது இயற்கை வனாந்தரங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நான் வலியுறுத்தியிருக்கின்றேன்.

நாம் யுத்தத்தையும் அபிவிருத்தியையும் சம காலத்தில் முன்னெடுத்தோம். நாடு எங்கிலும் அபிவிருத்தி, துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் என தொடர்கின்றன.

பல வருடங்களாக அடிக்கல் மட்டுமே மீதமாகவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை நாம் பார்த்திருக்கிறோம். நாம் அடிக்கல் அல்ல அபிவிருத்தியையே ஆரம்பிக்கிறோம். அரசாங்கத்துக்கு நல்லாட்சி சம்பந்தமான பயிற்சிகளை வழங்குவதற்காக 69 மில்லியனை அரச சார்பற்ற நிறுவனத்துக்கு மாதாந்தம் வழங்கிய அரசாங்கத்தைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். இந்த நிதியில் வீதிகளை, பாலங்களை நிர்மாணித்திருக்க முடியும்.

தேர்தலின் பின் மேலும் அபிவிருத்தி தொடரும்

நாடு, நாட்டு மக்கள் எனப் பார்த்தே அனைத்தையும் நாம் மேற்கொள்கிறோம். எதிர்வரும் தேர்தலின் பின்னர் அதிவேக அபிவிருத்திப் பணிகள் தொடரும். தற்போது யுத்தம் இல்லை நாம் எவ்வித தடையுமின்றி வேகமாக அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும்.

அதேபோன்று, சட்டத்தை நடை முறைப்படுத்தும் போது தராதரம், வகுப்பு வாதம் என பார்க்காது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முடிவுகளையே மேற்கொள்வோம்.

மக்கள் எம் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம்." இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

ரஷ்ய ஜனாதிபதியை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து கலந்துரையாடினார்


இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தனது உத்தியோகபூர்வமான முதல் விஜயமாக ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றையதினம் ரஷ்ய ஜனாதிபதி திமிட்ரீ மெட்வதேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாம் முறையும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரஷ்ய ஜனாதிபதி தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ரஷ்ய விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவு மேலும் வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளார். இரு தரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்த இன்றைய பேச்சு வார்த்தைகளையடுத்து இலங்கை ரஷ்யா இடையே முக்கிய சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ரஷ்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்க ஆகியோரும் உடன் சமூகமளித்திருந்தனர்.

திங்கள், 18 ஜனவரி, 2010

தொழிலாளர்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்க சில சக்திகள் சதித் திட்டம்: ஜனாதிபதி


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்க சில சக்திகள் சதித் திட்டம் தீட்டி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
கொட்டகலை பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மலையக எழுச்சி என்ற திட்டத்தின் கீழ் மலையக மக்களின் கனவுகள் மெய்ப்பிக்கப்படக் கூடிய காலம் தொலைவில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயமாக தோல்வியைத் தழுவுவோம் என்ற பீதி காரணமாக சிலர் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

லயன் அறை வாழ்க்கையை இல்லாதொழித்து, மின்சாரம், குடிநீர், சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளை மலையக தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க உள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

செவ்வாய், 12 ஜனவரி, 2010

கருத்துக் கணிப்பில் மஹிந்த ராஜபக்ச முன்னிலை!மஹிந்த ராஜபக்ஷவூக்கு 62வீதம் சரத் பொன்சேகாவூக்ககு 28வீதம்!


களணி பல்கலைக்கழகம் கணிப்பீடு
அரசுக்கு எதிரான ஊடகங்கள் என்னதான் மக்களின் மனதை மாற்ற முனைந்தாலும், பெரும்பான்மையான மக்கள் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே தமது ஆதரவை வழங்குவார்கள் என்பதை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முக்கியமான கருத்துக் கணிப்புகள் எடுத்துக் காட்டி நிற்கின்றன.

கடந்த வாரம், களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடம் நடாத்திய ஒரு கருத்துக் கணிப்பில், மகிந்த ராஜபக்சவுக்கு 62 வீதமான மக்களின் ஆதரவும், சரத் பொன்சேகாவுக்கு 28 வீதமான மக்களின் ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது.

இதை முன்னின்று நடாத்திய பேராசிரியர் கருணரத்ன கருத்துத் தெரிவிக்கையில், சரத் பொன்சேகாவுக்கு நகரப்புறங்களில் தான் ஓரளவு ஆதரவு இருப்பதாகவும்., கிராமப்புறங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு அமோக ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் இன்னொரு சுயாதீனமான அமைப்பான “நெக்ஸஸ் ரிசேர்ச் குறூப்” என்ற நிறுவனம் நடாத்திய கருத்துக் கணிப்பின்படி, மகிந்த ராஜபக்சவுக்கு 61.18 வீதமான ஆதரவும், சரத் பொன்சேகாவுக்கு 33.40 வீதமான ஆதரவும் மட்டுமே இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 5.42 வீதமான மக்கள் தமது ஆதரவு யாருக்கு என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை.

இந்த இரு கருத்துக் கணிப்புகளும் எந்தவித உள்நோக்கங்களும் இன்றி, சுயாதீனமாக நடாத்தப்பட்டவை என்றபடியால், மகிந்த ராஜபக்ச மீண்டும் எவ்வித சிரமமும் இன்றி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது நிட்சயமாக தெரிய வருகிறது.

அதேவேளையில், பொதுமக்கள் மத்தியில் இருந்தும், அவதானிப்பின் அடிப்படையில் ஒரு கருத்துக் கணிப்பும் முன்வைக்கப்படுகின்றது. அதாவது இலங்கையின் சனத்தொகையில் 72 வீதமானவர்கள் சிங்கள மக்கள். மிகுதி 28 வீதத்தினரில் 12 வீதமானவர்கள் வடக்கு கிழக்கு தமிழர்கள். மிகுதி 16 வீதம் முஸ்லீம் மக்களும், மலையக தமிழ் மக்களும் ஆவர்.

இதில் 72 வீதமான சிங்கள மக்களில் 50 வீதத்தினர் மகிந்தவுக்கும், 22 வீதத்தினர் சரத் பொன்சேகாவுக்கும் வாக்களிக்கக் கூடும். 16 வீதமான முஸ்லீம் - மலையக மக்கள், மகிந்த ராஜபக்சவுக்கு 8 வீதமாகவும் சரத் பொன்சேகாவுக்கு 8 வீதமாகவும் வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். 12 வீதமான வடக்கு – கிழக்கு தமிழ் மக்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி, சரத் பொன்சேகாவுக்கு 8 வீதமானோர் வாக்களித்தாலும், குறைந்தது 4 வீதமான தமிழ் மக்களாவது மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படிப்பார்த்தால் மகிந்த ராஜபக்சவுக்கு 62 வீதமும், சரத் பொன்சேகாவுக்கு 38 வீதமும் வாக்குகள் கிடைக்கக் கூடிய சூழலே காணப்படுகிறது. பொதுமக்களின் இந்தக் கணிப்பீடும், களனி பல்கலைக்கழகத்தினதும், “நெக்ஸஸ் ரிசேர்ச் குறூப்” இனதும் கணிப்பீட்டு முடிவுகளை அடியொற்றியே காணப்படுவதை அவதானிக்கலாம்.

பொதுவாக, பொதுமக்கள் மத்தியில் உள்ள நிமையை அவதானிக்கையிலும், ஆரம்பத்தில் சரத் பொன்சேகாவுக்கு இருந்த ஆதரவு வீழ்ச்சியடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. அதற்குக் காரணங்கள், சரத் பொன்சேகாவுக்கு என கட்சி ஒன்று இல்லாமல் இருப்பதாலும், அவரை ஆதரிக்கும் இரண்டு முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியகட்சியும், ஜே.வி.பியும் எதிரும் புதிருமான கொள்கைகளை கொண்டிருப்பதாலும், சரத் பொன்சேகா தற்செயலாக வெற்றி பெற்றாலும், யாருடைய சொற்படி அவர் ஆட்சி நடாத்துவது என்ற அதிகார இழுபறி ஏற்படலாம் என மக்கள் கருதுகின்றனர். அதுவுமல்லாமல், சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்துவிட்டு, ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டபடி ஆட்சியை அவரிடம் ஒப்படைப்பாரா என்ற சந்தேகமும் ஐக்கிய தேசியகட்சியிடம் நிலவுகின்றது.

மறுபக்கத்தில், தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் சரத் பொன்சேகாவும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இரகசிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளதாக சிங்கள மக்கள் மத்தியில் கருத்தொன்று உருவாகியுள்ளதால், சரத் பொன்சேகாவுக்கான ஆதரவு சிங்கள மக்கள் மத்தியில் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதனால் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றாவது வெற்றி பெற முடியுமா என்ற அங்கலாயப்பில் சரத் பொன்சேகா இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் சரத் பொன்சேகா தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு பல பொய் வாக்குறுதிகளை வழங்கிய போதும், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை பற்றி எதுவும் குறிப்பிடாததால், கூட்டமைப்பினரிடையிலேயே மிகுந்த அதிருப்தி காணப்படுவதையும், சம்பந்தன் கோஷ்டியினர் தனிமைப்பட்டுச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.

அதனால் தான் சம்பந்தர் – மாவை கோஸ்டி அவசர அவசரமாக யாழ்ப்பாணத்துக்கு ஓடி தமிழரசுக்கட்சி மாநாட்டைக் கூட்டி தங்களது தவறான செயல்பாட்டுக்கு அங்கீகாரம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில,; தான் பதவிக்கு வந்தால் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள், அரச ஊழியர்கள், படையினர் என்போரை பழிவாங்கப் போவதாக, சரத் பொன்சேகா கூட்டங்களில் பகிரங்கமாகப் பேசி வருவதால், மக்கள் மத்தியில் ஒருவித பீதி காணப்படுவதுடன், மகிந்த ராஜபக்ச நிச்சயம் வெல்வார் என்றபடியால், தேர்தலின் பின் சரத் பொன்சேகாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் என்ன நடக்குமோ என்ற அச்சம் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்hள் மத்தியிலும் காணப்படுகிறது.

இரு முக்கியமான கருத்துக் கணிப்புகள், மகிந்தவின் அபரிமிதமான வெற்றியை கட்டியம் கூறுகின்றன!

இலங்கையில் ஊடகத்துறையைப் பொறுத்தவரையில், மொழி வித்தியாசம் இன்றி சகல ஊடகங்களும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு சாதகமாகவே கடந்த 60 வருடங்களாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயம். எனவே வழமைபோலவே, இம்முறை ஜனாதிபதி தேர்தலிலும், அவை எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகவே பெரும் எடுப்பில் பிரச்சாரம் செய்து வருகின்றன.

ஆனால் கடந்த காலங்களைப் போலவே, தேர்தல் முடிவு வெளிவரும் போது, மக்கள் பெரும்பாலான ஊடகங்களின் கருத்துகளுக்கு எதிராக தீர்ப்பை வழங்கியிருப்பதைக் காணமுடியும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

ஜனாதிபதி வேட்பாளர்களான மகிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேகவும் சைபர் யுத்தத்திற்குத் தயாராகி விட்டார்கள்.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்டியில் உள்ள ஜனாதிபதி இல்லத்தில் வைத்து தனது தேர்தல் பிரச்சாரத்திற்கான www.mahinda2010.lk என்ற இணையத் தளத்தை ஆரம்பித்து வைத்தார்.

அந்த ஆரம்ப வைபவத்தின் போது உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தாய் நாட்டை எல்லோரும் நேசிக்க வேண்டும். எல்லாவற்றையும் விட இது முக்கியமானது. அப்போது தான் நாடு உலகில் உயர்ந்த இடத்தில் வைக்கப்படும். புடைவீரர்களால் நாடு எவ்வாறு கௌரவிக்கப்பட்டதென்பதற்கு நானே சாட்சி.

சிலர் வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களைப் படையினர் கொன்றதாகச் சொல்கிறார்கள். பிரபாகரனின் பெற்றோர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்செல்வனின் மனைவியும் பிள்ளையும் முகாமிலிருக்கிறார்கள். கடற்புலித் தலைவர் சூசையின் பிள்ளைகளும் மனைவியும் மீட்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகா www.sarathfonseka.com என்ற தனது இணையத்தளத்தை கொழும்பில் ராஜகீய மாவத்தையில் உள்ள தனது அலவலகத்தில் வைத்து ஆரம்பித்து வைத்தார். இந்த நவீன தொடர்பூடகம் எமது கொள்கைகளையும் நிலைப்பாட்டையும் மக்களிடம் எடுத்துச் செல்லும். எமது வெளிப்படைத்தன்மையைப் பறைசாற்றும் என்றும் அதன் போது தெரிவித்தார்