
இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தனது உத்தியோகபூர்வமான முதல் விஜயமாக ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றையதினம் ரஷ்ய ஜனாதிபதி திமிட்ரீ மெட்வதேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாம் முறையும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரஷ்ய ஜனாதிபதி தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ரஷ்ய விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவு மேலும் வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளார். இரு தரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்த இன்றைய பேச்சு வார்த்தைகளையடுத்து இலங்கை ரஷ்யா இடையே முக்கிய சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ரஷ்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்க ஆகியோரும் உடன் சமூகமளித்திருந்தனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’