
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு பாதுகாப்பாக சகல வசதிகளுடனும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.எனினும் அவர் தடுத்து வைக்கபட்டுள்ள இடம் இரகசியமாகவே பேணப்படும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் உறவினர்கள் அவரை பார்வையிட கோருவார்களேயாயின் அவர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கும் எனத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர், இராணுவத்தில் கடமையாற்றுகையில் மேற்கொண்ட குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் போன்றவற்றிற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இராணுவப் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்திலிருந்து விலகிய ஆறு மாதங்களுக்குள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் இராணுவப் பேச்சாளர் இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்தார்.
மேலதிக விபரங்கள் விரைவில்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’