வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

சரத் பொன்சேகாவின் கைதை கண்டித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள்


முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை புதன்கிழமை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளன. நாடு முழுவதிலும் முக்கிய நகரங்களில் இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை சரத் பொன்சேகாவின் கைது குறித்து, சர்வதேசத்திற்கு முறையிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோதே கரு ஜெயசூரிய இந்த தகவல்களை வெளியிட்டார்

இந்த ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஜே வி பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஆகியோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’